Latest News

கற்பழிப்பு என்பது மிகவும் கொடூரமான, மானக்கேடான குற்றம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து


டெல்லி: சமுதாயத்தில் கற்பழிப்பு என்பது ஒரு பெண்ணின் உடலை, மனதை, தனிமையை தாக்கி நிகழ்த்தப்படும் கொடூரச் செயலாகும். மேலும், பலாத்காரம் என்பது தார்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் மானக்கேடான குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட ஒருவன், அந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தான். நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரணைக்கு அனுமதித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்தான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது... கோடூரச்செயல்...

சமுதாயத்தில் கற்பழிப்பு என்பது ஒரு பெண்ணின் உடலை, மனதை, தனிமையை தாக்கி நிகழ்த்தப்படும் கொடூரச் செயலாகும். அது, தார்மீக ரீதியாக, உடல் ரீதியாக மிகவும் மானக்கேடான குற்றம் ஆகும்.ஒரு கொலைகாரன் தான் கொலை செய்யும் நபரின் உடலை அழிக்கிறான் என்றால், கற்பழிப்பு காமுகன் நிராதரவான ஒரு பெண்ணை சீரழித்து, கெடுத்து மன உளைச்சலையும் கொடுக்கிறான்.

வாழ்க்கையே பாழாகிறது...

கற்பழிப்பு என்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டு மொத்த வாழ்க்கையையே ஆட்டம் காண வைத்துவிடுகிறது. ஆகவே அவள் ஒரு விலங்கைவிட கேவலமாக மதிக்கப்படுகிறாள். அவளது வாழ்க்கையில் ஒரு மாறாத, அழிக்க முடியாத வடுவை அந்த கற்பழிப்பு உண்டாக்கி விடுகிறது.



 உள்ளாராத வடு...

அந்த வடு, வெளிப்புறமாக உடலில் காயம் படும் ஒருவரைவிட, கற்பழிக்கப்பட்டவளை மிகக் கேவலமான பீடத்தில் வைத்து விடுகிறது.கற்பழிப்பு என்பது இந்த ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் எதிரான குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்.



கவுரவத்தை சீரழிக்கிறது...

கற்பழிப்பு மிகவும் வெறுக்கத்தக்க குற்றம். அது பாதிக்கப்பட்ட பெண்ணின் கவுரவத்தை அடுக்கடுக்காக, பல வழிகளிலும் சீர் குலைக்கிறது. அவளுடைய மரியாதையை, மதிப்பை, கவுரவத்தை ஒட்டு மொத்தமாக அழித்து விடுகிறது.



 மனநிலையையும் பாதிக்கிறது...

 அவளது உடலை மாத்திரமல்ல, மன நிலையையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அழிக்க முடியாத வடுவையும் உண்டாக்கி விடுகிறது' என இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.