Latest News

  

சமூதாய சிந்தனை தேரோட்டம்!


(டாக்டர் ஏ.பீ.முகமது அலிஐ.பீ.எஸ்(ஓ )
    இன்று அதிகாலை(27.3.2013) நடைப் பயிற்ச்சியில் நண்பர்களுடன்டுபட்டிருக்கும்போது சாவன்னா என்ற நண்பர்  கேட்டார், 'ஏன் காக்காநமது சமூதாயத்தில் பெரிய தனவந்தர்கள் இருக்கிறார்களேஅப்படி இருந்தும் ஏழை முஸ்லிம்கள் தங்குவதிற்கான தங்கும் இடங்களோஅல்லது மருத்துவ சேவைக்கான  மருத்துவமனைகளோ இல்லை,' என்ற ஏக்கத்துடனான வினா எழுப்பினார்அவர் கேட்ட கேள்வியில் பிறந்த விடை தான் இந்தக் கட்டுரை! 

            தமிழகத்தில் குஜராத்மகாராஷ்டிரா,ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களில் இருந்து குடியேறிய ஜைன மத மக்கள் 85,000 அதாவது 0.13 சதவீத மக்கள் உள்ளனர். ஆனால் அந்த மக்கள் மண்டலகள் அமைத்து வெளியூரிலிருந்து வரும் ஜைனர்கள் தங்குவதிற்கும்சாப்பிடுவதிற்கும் வசதி செய்து கொடுக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல இலவச மருத்துவ முகாம்கள் அமைத்து மருந்துடன் கூடிய சேவைகளையும் செய்கிறார்கள்.

சென்னை மின்ட் பகுதியில் ஜெயின் கோவில் பகுதியில் சென்றால் தெரியும்,  கலை,மாலை ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குகிறார்கள்.

அதேபோன்று திருநெல்வேலிதூத்துக்குடி விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள  நாடார் மகாசபையினைச் சார்ந்தவர்கள் சென்னை வந்தால் தங்குவதிற்கு மண்டபங்கள் கட்டி உள்ளனர். மற்ற ஊர்களிலும் அதுபோன்ற அமைப்புகள் உள்ளன. 

ஆனால் ஏழு சதவீதம் கொண்ட நமது சமூதாயத்தினர் சென்னை வந்தால் இலவசத்திலோ அல்லது குறைந்த கட்டணத்தில் தங்க சென்னை சென்ட்ரலுக்கு எதிர்ப்புறமுள்ள சித்திக் செராயும்புளியந்தோப்பிலுள்ள ஹஜ் கமிட்டியும் தான் உள்ளது. அதேபோன்று இலவசமாகவும் குறைந்த செலவில் உள்ள மருத்துவ சேவையும் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள கிரசண்ட் மருத்தவ மனையும்வர்த்தக ரீதியாக உள்ள கீழ்பாக் ஆயிசா மருத்துவ மனையும்,திருவல்லிகேணியில் ஹிபாமதனி மருத்துவ மனைகளும் உளளன. கடற்கரை நகரங்களான கீழக்கரை யூசுப் சுலைகா மருததுவ மனை , காயல்ப் பட்டிணம் கே .டி .எம் மருத்துவமனையும்இளையாங்குடியில் செம்பிறை மருத்துவமனையும்  செயல் பட்டு வருகின்றன. ஆனால் மற்ற ஊர்களில் அதுபோன்ற ஒருங்கிணைந்த மருத்துவ மனைகள் இல்லை. ஆகவே பெரும்பாலான சமூதாய மக்கள் அருகில் உள்ள மருத்துவ மணிக்குப் படையெடுக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் ஆண் துணையில்லாத பெண்கள் அடுத்த  ஆண் துணையினைத் தேடுவதால் பல்வேறு தவறுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களிடம் ரத்த முகாமுகள் நடத்தி அந்நிய மருத்துவ மணிக்குத்தான் வழங்குகிறார்கள். ஆகவே நமது சமூதாய மக்கள் மருத்துவ மனைகள் அமைத்து சுகாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும்.

ஏற்கனவே உள்ள மருத்துவ மனைக்கு வரும் டாக்டர்ஸ் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தரமான கல்வி நினையங்கள் இல்லாததால் முஸ்லிம் ஊர்களில் தங்குவதில்லை என்ற குறை இருப்பது உண்மைதான் சென்னை போன்ற ஊர்களில் உள்ள முஸ்லிம் கல்வி நிலையங்களும் தரமில்லாததால் கிருத்துவர்கள் நடத்தும் பள்ளிகளுக்குப் படைஎடுக்கின்றார்கள். ஆனால் அந்த நிர்வாகத்தால் முஸ்லிம் பெண்கள்,ஆண்கள் நடத்தப் படும் விதமே அவமானம் தான்  மியாசி என்ற தென் இந்திய முஸ்லிம்கள் அமைப்புக் கூட்டத்தில் ஒரு உண்மை சம்பவத்தினை ஒரு பொறுப்புள்ள உறுப்பினர் சொன்னார். அதாவது ஒரு முஸ்லிம் பெண் மண்ணடியிலுள்ள ஒரு கிருத்துவ பள்ளிக் கூடத்தின் தலைமை ஆசிரியரின் காலில் தன் மகன் அட்மிஷனுக்கு காலில் விழுந்திருக்கிறார். ஏன் இந்த பரிதாப நிலை என்றால் மண்ணடியில் கூட முஸ்லிம்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. ஆனால் அதன் தரத்தினை உயர்த்த முடியாத பரிதாப நிலைத்தான். இந்த கேடுகெட்ட செயலுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே பதவிக்காக பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகிகள் என்ற நிலைமாறி முஸ்லிம் சமூதாய மக்களுக்குத் தரமான கல்வி நிலையங்கள் நடத்த வேண்டும்.

            ஐரோப்பாவில் உள்ள முன்னாள் யுகோஸ்லாவியாவில் பிறந்து கல்கத்தாவில் சேவைக்காக தன் வாழ்நாளைத் தியாகம் செய்த அன்னை தெரசா நோபிள் பரிசினை 1979 ஆம் ஆண்டு வாங்கும் பொது அதன் பொருட்டு ஆறு லக்ஷம் ரூபாய் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஆனால் தெரசா தனக்கு விருந்து வேண்டாம். அந்தப் பணத்தினைக் கொடுத்தால் கல்கத்தாவில் நடை பாதையில் வாழும் ஏழைகளுக்கு வழங்குவேன் என்று கேட்டுப் பெற்று பணியாற்றினார். அதே போன்று பதவிக்காக சமூதாய பொது நிர்வாகங்களுக்கு வராது முஸ்லிம் மக்களை வாழ வைக்க வழி வகைகளை சமூதாய இயக்கங்கள் செய்ய வேண்டும்.


AP,Mohamed Ali    

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.