அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அதிரைக்கென்று இருந்த பாரம்பரியம், கம்பீரம், மார்க்கப் பற்றில் இருந்த பிடிப்பு, அதற்கென்று கட்டுண்டு இறையச்சத்தைப் பேணுபவர்கள் என்ற தகுதிகளைத் தகர்த்தெரியப் புறப்பட்டிருக்கும் நயவஞ்சகச் செயல்களுக்கு பகிரங்க எச்சரிக்கையாக இந்த பதிவு. இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமாக நம்முடைய சகோதரர்கள் சிலர் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும், கவுரவத்திற்காகவும் சத்தியத்தை எடுத்துரைக்கும் மார்க்க பிரச்சாரகர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள். அவர்களின் இந்த சூழ்ச்சிக்கு நமதூருக்கு குடிபெயர்ந்து வந்த ஒரு மார்க்க பிரச்சாரகர் தற்போது இரையாகிவிட்டார்.
ஷிர்க் பித்அத்துக்களைப் பகிரங்கமாகவும், வன்மையாகவும் கண்டித்து எதிர்த்த கண்ணியத்திற்குரிய மர்ஹூம் அலீய் ஆலிம் அவர்கள் வாழும் காலத்தில் ஏளனமாக பேசிய அதே கூட்டம் தான் இன்று இந்த மார்க்க பிரச்சாரகரையும் ஏளனமாக பேசி, அவரை அதிரையை விட்டு விரட்ட முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர் தர்கா வழிபாடு, இணை வைப்பு, வட்டி, மவுலத்து, தாயத்து, தட்டை போன்ற பிற மத கலாச்சாரங்களை, பித்அத்து அனாச்சாரங்களைப் பகிரங்கமாகக் கண்டித்துது மட்டுமின்றி, எதிர்த்தும் வந்துள்ளார், தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.
யார்? எங்கு? எப்போது? என்னவெல்லாம் உரையாடினார்கள், எவ்வளவு பாதகமான காரியங்கள், என்னவெல்லாம் சூழ்ச்சிகள் செய்தார்கள், என்பதை வெளியில் கொண்டு வருவது மிக மிக எளிது என்பதை இவர்கள் அறியவில்லையா ?. மேலும் சூழ்சிக்காரர்களின் அநீதி மிகுந்த வாதங்கள், ரகசிய ஆலோசனைகள் இவற்றை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் சத்தியத்துக்கு எதிராக திரளும் இந்தக் கூட்டத்தின் சதிகளை இறையச்சமிக்க மக்கள் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்குகிறார்கள்.
உண்மையை உரக்கச் சொல்லும் ஆலிமை ஊரைவிட்டு துரத்தும் முயற்சிக்குப் எதிராக பல வகையில் சூழ்ச்சிகள் செய்யப்படுகிறது, சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். சத்திய இஸ்லாத்திற்காக எதிராக சூழ்ச்சி செய்யும் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் எப்படி இவ்வுலகில் கேவலப்படுத்தி இருக்கிறான் என்ற வரலாற்றை எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாது.
கடந்த சில வருடங்களாக நமதூர் வாசிகள் அனைவரும் அவதானித்து வருகிறார்கள், குறிப்பிட்ட ஓர் ஆலிம் அவர் வெளியூரிலிருந்து வந்தவர் என்ற காரணத்தாலும், சத்தியத்தை உள்ளது உள்ளபடி உள்ளூரில் இருக்கும் மார்க்க பிரச்சாரகர்கள் பகிரங்கமாக எதிர்க்க, சொல்லத் தயங்கும் விஷயங்களை எடுத்துச் சொல்லி வந்த காரணத்தாலும் அவரை படாதபாடுபடுத்தி வருகிறார்கள் நம் அதிரை மண்ணின் மைந்தர்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விளக்கம் கேட்கும் அமர்வில் சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் மார்க்க சொற்பொழிவில் தவறேதும் இல்லை என்று ஒத்துக் கொண்டவர்கள், தற்போது அதே மார்க்கப் பிரச்சாரகருக்கு எதிராக நிற்பவர்களுக்கு உதவியும், ஊக்கமும் கொடுத்துவரும் நமது சகோதரர்களின் நிலைபாட்டை எந்த வகையில் சேர்ப்பது !?.
அன்று அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட விளக்கங்களில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஆலிமைப் பற்றி சொன்னது, “ அவரின் பயானில் தவறில்லை”, “அவர் எங்களை அவமதித்தார்”, “பயான் தடை நடவடிக்கை தற்காலிகம் அல்ல”, “அந்த தீர்ப்பை மாற்றவே முடியாது” என்றும். “அவருக்கு மன்னிப்பு கிடையாது”. குறிப்பிட்ட நபரின் மீதான தனிப்பட்ட விரோதமே அந்த மார்க்க பிரச்சாரகரின் மீது நடவடிக்கை எடுக்க காரணம் என்று முரண்பட்ட வார்த்தை சிதறல்கள் ஏராளம் ஏராளம்.
இவர்கள் இன்னும் ஒருபடி மேலேச் சென்று சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும், அங்கே அடிதடி ஏற்பட வேண்டும் என்ற சமூக விரோதச் செயலை செய்ய அப்பாவி லெப்பைமார்களை உசுப்பேற்றியது. அதோடு அல்லாமல் அங்கே குளிர் காய நினைக்க முயன்றவர்களின் நயவஞ்சகச் சதித்திட்டங்களையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்த இவர்களின் அன்றைய சூழ்சிக்கு, கீழ்கண்ட செயல்களே சாட்சி.
- லெப்பைக் குடும்ப சகோதரர்களைத் தூண்டி, ஆலிமுக்கு எதிராக முக்கியமான தெருக்களின் ஜமாத்திற்கு சென்று மனு கொடுக்க வற்புறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது.
- அவர் மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டாம் என்றும், எங்கள் பிழைப்பில் அடித்துவிட்டார் என்று மற்ற தெரு ஜமாத்துக்களிடம் மனு கொடுங்கள் என்று லெப்பைக் குடும்ப சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கியது.
- சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக அரசாங்க உதவியை நாடலாமே என்று யோசனையை லெப்பை மார்கள் வழங்கியது.
- ஊரில் ஏகப்பட்ட இயக்கங்கள் இருக்கும் போது லெப்பைகளின் நலனுக்காக ஏன் சங்கம் இல்லை? என்று கேள்வி எழுப்பி பிரச்சினையை மேலும் பெரிதாக்க முயன்றது.
- தக்வா பள்ளியில் நடைபெறும் பயானில் லெப்பைமார்கள் பிரச்சினையை ஏற்படுத்தினால் ஆலிமை ஊரைவிட்டு துரத்திவிடலாம் என்ற யோசனையை முன் வைத்தது.
- பிரச்சினை முற்றிப்போய் வெட்டு-குத்து வந்தால் யார் பொறுப்பு என்று அச்சத்துடன் கேட்ட ஒரு லெப்பை சகோதரரிடம், “அதெல்லாம் பயப்படத் தேவையில்லை” என்று தைரியம் சொன்னது.
- தக்வா முஹல்லாவாசி என்ற பெயரில் தக்வா பள்ளியின் அன்றைய கமிட்டித் தலைவரிடம் “நான் பிரச்சினை செய்வேன்” என்று மிரட்டியது.
மேலே சொல்லப்பட்டவைகள் பதிவுக்கு என்று எழுதப்பட்ட வரிகள் அல்ல அத்தனையும் உண்மை, அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்ளை ஆய்வு செய்த பின்னரே இதனை பொதுவில் வைக்கிறோம்.
அறிந்தோ, அறியாமலோ நம்முடைய சகோதரர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும், ஒரு சிலரை பழிவாங்குவதற்காகவும் தூய இஸ்லாமிய நெறிமுறைகளைப் புறந்தள்ளி. சத்தியப் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை குறிவைத்து தங்களின் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள்.
இனியும் ஏகத்துவ சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களில் தொடர்புடையவர்கள், அவர்கள் செய்ததது தவறு என்று திருந்த வேண்டும். மேலும் மேலும் பிரச்சினை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
இவர்கள் யார் இதனைச் சொல்ல நாங்கள் இப்படித் தான் இருப்போம். இன்னும் பல சூழ்ச்சிகள் செய்வோம், பழிவாங்குவோம் என்று இன்னும் வீராப்பு காட்டினால், இதுவரை பொறுமையைக் கையாண்டு வரும் சகோதரர்களின் மேலும் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் அதிலும் மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கான ஆதாரங்களைப் பொதுவில் வைக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து, இனியும் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க முயற்சிக்கட்டும் என்றும் பகிரங்க எச்சரிக்கையாகவே இங்கே பதிகிறோம்.
அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.
சூழ்ச்சிகள் செய்யும் அன்பர்களே உங்களின் மறைவானவற்றையும், வெளிப்புறங்களையும் அல்லாஹ் கண்காணிக்கிறான், மலக்குமார்கள் கண்காணிக்கிறார்கள், அத்தோடு மனிதனால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நயவஞ்சக கூட்டத்திற்கு நாளை கபுரிலும் வேதனையுண்டு, மஹ்சரிலும் வேதனையுண்டு, நரகத்தின் அடிதட்டில் நிச்சயம் இடம் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறோம்.
அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.
யா அல்லாஹ் நாங்கள் எல்லோரும் இவ்வுலகின் அற்பமான சுயநலனுக்காக எவ்வளவோ தவறுகள் செய்கிறோம், அதனை மன்னித்து எங்களை நேர்வழி படுத்துவாயாக!
யா அல்லாஹ் உன்னை மட்டுமே வணங்கும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக!
வேறு எந்த தனிமனிதனின் திருப்திக்காக வாழும் நயவஞ்சகர்களாக எங்களை ஆளாக்கிவிடாதே!
எங்கள் அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக!
நன்றி : அதிரைநிருபர்
No comments:
Post a Comment