கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக திருச்சி கியூ பிரிவு காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் இதனை எதிர்த்து அவரது மனைவி, " தன் கணவர் எவ்வித குற்றத்திலும் ஈடுபடாதவர்.காவல்துறையினர் கட்டாயப்படுத்தி, ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இவர் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் - என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்" என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்த விசாரணையின் பின்பு நீதிபதி ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் , "தமீம் அன்சாரி வெறும் யூகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் எந்த ஆதாரங்களையும், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப் படவில்லை, எனவே தமீம் அன்சாரி என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது." இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
inneram.com
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment