அதிரையில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நியாய விலைகளில் சீனி, மண்எண்ணெய், இலவச அரிசி, சமையல் எண்ணெய், உளுந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன.
அதிரையில் அதிக எண்ணிக்கையில், அதாவது மேலத்தெரு, காட்டுபள்ளித் தெரு, பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதியில் இருந்து ஏறக்குறைய 2000 த்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மேலத்தெருவில் அமைந்துள்ள நியாய விலைக் கடை எண் 6 பெற்றுள்ளது.
இந்தக் கடையிலிருந்து பொருட்களை வாங்கிச் செல்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வருகை தரும் தாய்மார்கள் கடையைச் சுற்றிய வெளிப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்ற அவல நிலை காணப்பட்டு வந்தது. இதனால் வயதான ஒரு சிலர் அவ்வப்போது மயங்கி கீழே விழுவதும் உண்டு.
இதைக்கருத்தில் கொண்டு மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கம் நிர்வாகத்தின் சார்பாக வெயிலின் கொடுமையை குறைக்கும் விதமாக கடையைச்சுற்றி பந்தல் அமைத்துக் கொடுத்து, அதில் தண்ணீரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இதனால் இந்தக் கடையில் பொருட்கள் வாங்கிச்
செல்லும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைதுள்ளதோடு மட்டுமல்லாமல் தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் மனிதநேயப் பணியை பாராட்டத் தவறியதில்லை.
இது தற்காலிக பந்தல் என்றாலும் எதிர்காலத்தில் நிரந்திர செட் அமைத்து பொதுமக்களை வெயிலின் கொடுமையிலிருந்து பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்போம். இதுபோல் மற்ற மஹல்லாவில் அமைந்துள்ள நியாய விலைக்கடைகளிலும் அந்தந்த சங்க நிர்வாகத்தின் சார்பாக பந்தல் அமைத்து தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்தால் பொதுமக்கள் மிகவும் பயனடைவர்.
நன்றி : அதிரை நியூஸ்
http://theadirainews.blogspot.in/2013/04/blog-post_1113.html
அதிரை மேலத் தெரு TIYA-விற்க்கு SDPI நன்றி அறிவிப்பு!
ReplyDeleteஅதிரை SDPI மேற்க்கு கிளை சார்பில் தாஜூல் இஸ்லாம் சங்கத்திடம் மேலத் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு நிழல் பந்தல் அமைப்பது தொடர்பாக வேண்டுக்கோள் வைக்கப்பட்டது. இதனை ஏற்று தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பில் தற்போது நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக SDPI நிர்வாகிகளிடம் கேட்டதற்க்கு "எங்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் நலனில் அக்கறை கொண்டு விரைந்து நிழல் பந்தல் அமைத்த தாஜூல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினர்.