அன்றாடம் நடைபெரும் பள்ளி கூட வகுப்பறையில் ஆசிரியரின் அணுகு முறை எப்படி இருக்கும் இதனை உளவியல் ரீதியாக பார்ப்போம்...
ஆசிரியருக்கு பாடம் நடத்திட காலகெடு நிர்வாகம் கட்டளை இட்டிருக்கும் காலாண்டிற்குள் இத்தனை பாடம் நடத்தி முடிக்க வேண்டும்.
அறையாண்டிற்கு ..இத்தனை பாடம் ..கல்வியாண்டு முடிவிற்குள் அனைத்து பாடங்களும் முடிக்க பட வேண்டும் இவையல்லாமல் வகுப்பில் நூறுசத விகிதம் தேர்வு பெற வேண்டும் என்ற கட்டளையும் இட்டிருப்பார்கள். இதுவே ஆசிரியரின் கடினமான அணுகு முறைக்கு காரணமாக அமைகிறது. நான் முன்பு கூறிய நான்கு பின்னணி கொண்ட மாணவர்களின் நுகர்வு அடிப்படையிலேயே ஆசிரியரின் அணுகு முறையும் அமைகிறது.
சில பள்ளிகளில் நல்ல கல்வி பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகமாக காணப்படும் நிலை என்றால் அங்கு அமைதியான சூழலும் நிகழும். ஆனால் நான் கூறிய வறுமையில் வாடும் கல்வி பின்னணி இல்லா சூழலில் வளர்ந்த பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்ப்பிக்கும் முறை வழக்கத்திற்கு மாறான முறையில் இருக்கும். தனக்கு இவ்வுலகில் எந்த வசதியும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வாடிய முகம், வதங்கிய உள்ளம் உற்சாக மில்லா சூழல் இதையறியா ஆசிரியர் கனிவான அணுகுமுறையை கையாளாமல், தான் நடத்திய பாடத்தை கவனிக்க வில்லையே என்ற குற்ற பார்வையே அவன் மீது விழும் கடுமையான வார்த்தைகள், சில நேரங்களில் அவமதிப்பு ,சில நேரங்களில் வகுப்பை விட்டு வெளியே அனுப்பும் தண்டனை என்று மேலும் உள்ளத்தை வதங்க வைக்கும் என்ற உளவியல் ரீதியான ஒரு தகவலைக் கூற விரும்புகிறேன்.
ஆசிரியருக்கும் மன அழுத்தம் இருக்கவே செய்யும் அவருக்கும் உளவியல் வல்லுனரின் ஆலோசனை தேவை. அதே போன்று வாழ்க்கை பின்னணி அறிந்து மாணவருக்கும் உளவியல் வல்லுனரின் ஆலோசனை தேவை.
எனவே ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் வல்லுநர் நியமிக்க பட வேண்டும். வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கவனி.. கவனி.. என்பார்கள் ஆனால் மாணவர்களை ஒவ்வொருவராக கவனிக்க வேண்டியது ஆசிரியரே ஆவார்.
சில மாணவர்களுக்கு பாராட்டு தேவை,
சில மாணவர்களுக்கு அன்பு தேவை,
சில மாணவர்களுக்கு ஆறுதல் தேவை.
உள்ளத்தை அறிந்து ஆசிரியர்கள் செயல்பட்டால் மாணவர்களின் உள்ளம் கேட்கும் MORE ... MORE... ஆசிரியரின் பாடத்தை கேட்பர்.
உயர்நிலை பள்ளிக்கூடம் செல்லும் ஏழைக் குழந்தைகள் உள்ளம் கேட்கும். சாய்ந்து கொள்ள ஒரு தோல் வேண்டும் என்று அது என்ன !? என்பதை அடுத்த தொடரில் காண்போம்....
இன்னும் வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
No comments:
Post a Comment