போட்டிக்குத்தானா !
இன்ஸ்டன்ட் விளையாட்டு 5 நாட்கள் விளையாடிய டெஸ்ட் மேட்ச்,
50 ஓவர் ஒரு நாள் போட்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு பாஸ்ட் புட்
காலத்தில் வந்த இளைஞர்களின் பிடித்த விளையாட்டு.
வெளி உறவு மந்திரிகள் கைகுலுக்கி உறவாடினாலும்! விளையாட்டில்
எதிரிகளாய் பார்க்கும் கிரிக்கட்டில் ! அத்துணை நாட்டவரையும் ஒன்று
சேர்த்த பெருமை 20/20 IPL போட்டிக்கு உண்டு.
லாட்டரி சீட்டுகள் விற்பனையாகி ஒரு மாதத்திற்கு காத்திராமல்
சுரண்டல் லாட்டரி ஒரு நம்பர் லாட்டரிபோல் 20/20 போட்டியும் உடனடி முடிவு
காணும் சுரண்டல் லாட்டரி.
விளையாட்டு குழுவின் உரிமையாளருக்கும் இது ஒரு லாட்டரி தான்
வெற்றியை பொறுத்தது. சூது விளையாட்டும் சேர்ந்து கொண்டது இத்தோடு.
ஓர் நடிகையும் ஒரு குழுவின் உரிமையாளர் அவ்வணி வெற்றி கண்டால்
கட்டிப்பிடி வைத்தியம் நிச்சயமுண்டு விளையாட்டு அரங்கிலேயே!
சிக்ஸரும், பவுண்டரியும், ஏன் கிளீன் போல்டும் அமைந்துவிட்டால்
கண்ணுக்கு விருந்தாக கிட்டுமே மங்கையரின் ஆட்டம் பாட்டம் 11 நபர்
விளையாட 11000 !? பேர் கண்டுகளிக்கும் கிரிக்கெட்டை பெர்னாட்ஷா முட்டாள்களின் விளையாட்டென்றார் 20/20 IPL போட்டியைக் கண்டால் என்ன சொல்வாரோ !?
விளம்பரதாரர்களின் பொன் முட்டையிடும் வாத்து விளையாட்டை நேரில்
காண்பவரைவிட TV வழி காண்போர்தாம் அதிகம் அதனால்தான் விளம்பரங்கள் விளையாட்டு நிகழ்வைவிட அதிக நேரம் இடம்பிடிக்கின்றன தொலைக்காட்சி பெட்டிக்குள் !
No comments:
Post a Comment