இந்தியா
சுதந்திரமடைவதற்கு முன்பே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டதாக
கனவு கண்டாயே...
அப்போதே நீ
சொல்லியிருக்கலாம்
ஆனந்த சுதந்திரத்திற்கு
இப்படியொரு அர்த்தமிருப்பதை.
பாப்பாக்களைப்
படிக்கச் சொன்னாய்...
விளையாடச் சொன்னாய்...
சரிதான்,
பாடச் சொன்னாயே...?
இப்போதெங்கள்
பாப்பாக்கள் பாடும்
பாட்டையெல்லாம்
முகம் சுளிக்காமல்
முழுவதுமாய் கேட்டுவிட்டு
பிறாகாவது
உன் வார்த்தையைத்
திரும்ப பெற்றுக் கொள்கிறாயா ?
மங்கையராய் பிறப்பதற்கு
மாதவம் செய்ய வேண்டுமேன்றாயே ?
தவத்தின் பலம் !?
உன் வரமா ? சாபமா ? என்பதை
விளக்காமல் விட்டதேன் ?
ஊழலிலும் ஊரும்
அரசியல்வாதிகள்
இலஞ்சத்தில் புரளும்
அதிகாரிகள்
அச்சமில்லை அச்சமில்லையென்று
உலாவருவது
உனக்கு தெரியுமா ?
மெல்லத் தமிழினிச்
சாகும் மென்று
இப்போது நிகழ்வதை
அப்போதே சொன்னவன் நீ !
எதிர்பார்த்து சொன்னாயா ?
No comments:
Post a Comment