மத்திய அரசுத் துறைகளில் உதவியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, நடப்பாண்டு Staff Selection Commission தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன.
மத்திய தலைமைச் செயலகம், மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, புலனாய்வுத் துறை, ரயில்வே அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், ராணுவ அமைச்சகம், தபால்துறை, மத்திய தணிக்கைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் சி பிரிவு பணியாளர்கள் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு மற்றும் கணினித்திறன் சோதனை, நேர்முகத்தேர்வு என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெற உள்ளன.
முதல் நிலை தேர்வு ஏப்ரல் 14 மற்றும் 21 தேதிகளிலும், இரண்டாம் நிலை ஜூலை 20 மற்றும் 21 தேதிகளிலும் நடைபெற உள்ளன. SSC நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பிக்க, குறைந்த பட்சம் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 2 மணி நேரம் நடைபெறும் இந்த எழுத்துத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 200.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் தங்களது அசல் சாதி சான்றிதழ்களுடன் விண்ணப்பிப்பது அவசியம். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
கணினியில் தேர்ச்சி அவசியம்:
Staff Selection Commission நடத்தும் மத்திய அரசுப்பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், என்னென்ன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். .
மத்திய அமைச்சகங்களில் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், தபால் துறை ஆய்வாளர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், கணக்கு தணிக்கையாளர், கணக்காளர், வரி உதவியாளர், உதவி ஆய்வாளர், மேல்நிலை எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கம்பைலர் பணிக்கு விண்ணப்பிப்பவர், பொரருளாதாரம், புள்ளியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்து, பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புள்ளியியல் ஆய்வாளர் பணியில் சேர விரும்புபவர், ஏதேனும் ஒரு வகையில் புள்ளியியல் பாடத்தை எடுத்து படித்திருக்க வேண்டும். உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
மத்திய அரசு பணிக்கு Staff Selection Commission நடத்தப்படும் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இப்போது பார்க்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டவர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி, விண்ணப்பத் தொகையை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன் லைன் மூலமாகவும் பூர்த்தி செய்து அனுப்பவும், மேலதிக விவரங்களை பெறவும், www.ssconline.nic.in என்ற இணைய முகவரியை அணுகலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 15, கடைசி நாள். அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம், காஷ்மீர், அந்தமான் உள்ளிட்ட தென் கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, பிப்ரவரி 22-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிராந்திய மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். ஒரு தேர்வர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
நன்றி : Adirai Allmuhallah
No comments:
Post a Comment