தஞ்சாவூரில் இயங்கி வரும் மத்திய அரசின் Indian Institute of Crop Processing Technology-ல் துணை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தஞ்சாவூர் IICPT-ல் Senior Research Fellow பணிகளுக்கு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது. Food Chemistry, Food Processing, Food Engineering, Post Harvest Technology உள்ளிட்ட பிரிவுகளில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு 35-ஆகவும், பெண்களுக்கு 40-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தைwww.iicpt.edu.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதே போல ஆசிரியர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கான விண்ணப்பங்களையும் www.iicpt.edu.inஎன்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை The Director, IICPT, Thanjavur - 613 005 என்ற பெயரில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Indian Institute of Crop Processing Technology, Pudukottai Road, Thanjavur - 5.
Indian Institute of Crop Processing Technology, Pudukottai Road, Thanjavur - 5.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 4-ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு www.iicpt.edu.in என்ற இணைய தளத்தை காணலாம் அல்லது 04362 - 228 155 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம். இவை தவிர director@iicpt.edu.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தகவல்களைப் பெறலாம்.
நன்றி : Adirai Allmuhallah
No comments:
Post a Comment