Latest News

அதிரையில் ரூ 1.05 கோடியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் !


தமிழக அரசின் சார்பாக 2012-13 ஆம் ஆண்டு நிதியாண்டில் பதிவுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடுகள் நிகழாமல் கண்காணிக்கவும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பதிவுத்துறை அலுவலகம் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்க தமிழக அரசின் சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்று. அதிரை சார்பதிவாளர் அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுமானப் பணிக்காக ரூபாய் ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, உடன் இவற்றை செயல்படுத்த ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிரை ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சார்ந்த சகோ. ஜஹபர் அலி அவர்களின் சார்பாக ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே அதிரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.