விடுமுறையில் தாயகம் திரும்பியுள்ள 'மனித உரிமைக்காவலர்' K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் நேற்று இரவு என்னைத் தொடர்பு கொண்டு, அதிரை மெய்சா அவர்கள் தனது விடுமுறையைக் கழித்து விட்டு இன்று துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் இன்றே உங்கள் இருவரோடு அவசர விடுமுறையில் ஊர் வந்துள்ள 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களையும் காண ஆவலாக இருக்கிறேன். அதற்காக எனது வீட்டில் ஒரு தேநீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமா ? என்றார். இரவு நேரமாக இருந்தாலும் அவரின் ஆர்வத்தை பாராட்டிவிட்டு முயற்சிக்கிறேன் என்றேன்.
K.M.A. ஜமால் முஹம்மது அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று மற்ற இருவரையும் உடன் தொடர்பு கொள்வதில் மும்முரம் ஆனேன். பயண ஏற்பாட்டில் பிஸியாக இருக்கும் புதுமைக் கவிதைகளையும், விழிப்புணர்வு ஆக்கங்களையும் பதிந்து வரும் அதிரை மெய்சா அவர்களும், தனது கவியால் உலகளவில் எண்ணற்ற வாசகர்களைப் பெற்றுள்ள யாப்பில் மூத்த கவி 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களை சந்திக்க தனது ஆவலை ஏற்கனவே என்னிடம் தெரிவித்து விட்டதால் இவர்களை உடனடியாக ஒருங்கினைப்பதில் எனக்கு சிரமம் இல்லாமல் போய்விட்டது.
அடுத்து சில நிமிடங்களில் பெரிய ஜும்ஆ பள்ளியில் ஒன்று கூடுகின்றோம். உடனே அவர்கள் இருவரையும் என்னோடு அழைத்துக்கொண்டு K.M.A. ஜமால் முஹம்மது அவர்களின் இல்லத்திற்கு செல்கிறேன்.
K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுடனான எனது சந்திப்பு முதல் தடவை என்றாலும், K.M.A. ஜமால் முஹம்மது அவர்களும் அவரது மகன் தம்பி முஹம்மது நிஜாமுதீனும் அன்புடன் எங்களை வரவேற்று அழைத்து சென்றது எங்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
பரஸ்பரம் நலம் விசாரிப்புகளோடு எங்களின் பேச்சுகள் சமூக நலன், தமிழ் மொழியின் சிறப்பு, உச்சரிப்பு, குடும்ப உறவுகள், விபத்துகள் ஏற்படக் காரணம், மனித உரிமைகள் போன்றவற்றை சார்ந்து இருந்தது.
எனது ‘விழிப்புணர்வு பக்கங்கள்’ மற்றும் ‘மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்’ இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதிய ‘மனு நீதி மனித குலத்துக்கு நீதியா ?‘ ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இச்சந்திப்பில் கலந்து கொண்டோருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எங்களுக்கு மகிழ்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் பயனுள்ளவையாகவும் அமைந்தது. இறுதியில் எங்களின் சார்பாக K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.
சேக்கனா M. நிஜாம்
Thanks : http://nijampage.blogspot.in/2013/01/blog-post_22.html
No comments:
Post a Comment