Latest News

நான் பெத்த மொவனே !



நமது வாழ்வில் முக்கிய அங்கம் தாய். தாயின் சிறப்பு விலைமதிப்பற்றது தாய் அன்பிற்கு ஏதும் ஈடாகாது.

மாதா :                                         
தாய் தங்கத் தாம்புலத்தில் அமர வைத்து தலை மேல்வைத்து கொண்டாடப்பட வேண்டியவள் தன் காலுக்கு கீழே சுவர்க்கத்தை வைத்திருப்பவள்; தாயவள் தூயவள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை என்பர் வணக்கஸ்தளத்தை அலங்கரிக்கு முன் தாயை பராமரிப்பதே மேல் பணிக்குக்குச் செல்லும் முன் தாய்க்கு பணிவிடை செய்துவிட்டுச் செல்வது சிறப்பு.

தாய் தாரமாகிறாள் தமக்கையாகிறாள் பாட்டியாகிறாள் உறவுகளாள் பலமுகம் பெருகிறாள் அவள் எப்படிப்பட்டவளானாலும் தாய் உள்ளத்தோடு இருத்தலே பெண்னின் சிறப்பு.

கோபம்கொண்ட மனைவி சமைக்காமல் படுத்துவிடுகிறாள்

கோபம்கொண்ட தாய் சமைத்துவிட்டு பசியோடு படுத்துவிடுகிறாள்

ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் இருக்கையில் மேற்ச்சொன்ன விஷயம் உருத்தலாம் கோபம் கொண்ட மனைவி தன் பிள்ளைக்கு மட்டும் உணவு ஊட்டிவிட்டு தானும் தன் கோபத்திற்க்கு காரணமான  கனவரையும் பசியோடு படுத்து விட மேல குறிப்பிட்ட விஷயம் சரியாகி விட்டதல்லவா!

தாயை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு பெண் பிள்ளைகளை விட ஆண் மகனுக்கே பொறுப்பு உண்டு பெண் பிள்ளைகள் தன்னுடைய கணவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவள் ஆணுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை நாம் எத்தனையோ சம்பவங்களை கேட்டிருக்கிறோம் மகனுக்குத்தான் பொறுப்பு அதிகம் ஆகையால் நாம் நம் வயது முதிர்ந்த தாயை நம் பிள்ளைகளை பராமரிப்பதுபோல் கடைவீதிக்கு செல்லும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து வாங்கும் தீன் பண்டங்களை தம் முதிய தாய்க்கும் வாங்கி கொடுத்து அருகில் அமர்ந்து சாப்பிடக்கொடுத்து பின் சாப்பிட்ட உணவு உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதையும் நாமே கவனிக்க வேண்டும்.

தாயை வெறுக்கின்ற சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் அது அவர்களின் துரதிஸ்டம் பிள்ளைகளின் செயல்பாடுகளில் குறை கண்ட தாய் பிள்ளைகளில் வேறுபாடான பரிவை காட்டும் தாயும் இருக்கத்தான் செய்கிறார்கள் இது காலத்தின் கோலம் கட்டளையிட்டவனின் கட்டுப்பாட்டை மீருதல் எது எப்படியோ தாயிடம் நாம் காட்டும் பரிவு, பற்று, பாசம் எந்தவகையிலும் குறைவு இருக்கக்கூடாது.

பிதா :
ஆதி மனிதர் ஆதம் [ நபி ] மின் விளா எலும்பில் இருந்துதான் ஹவா [ அலை ] படைக்கப்பட்டார் [  ஏவாள் ] இது இஸ்லாத்தின் கோட்பாடு பரலோகத்தில் [ அல்லாஹ் ]இருக்கும் பிதாவே என்கிறது கிரிஸ்துவம் சிவனில் பாதி பார்வதி என்கிறது இந்து மதம் இப்படி அனைத்து மதக்கோட்பாடுகளும் ஆணிற்க்கு அந்தஸ்தை கொடுத்திருக்கிறது.

தாய் இடுப்பில் சுமக்கும் பிள்ளையை தந்தை தோளில் சுமக்குறான் தான் காணாததையும் பிள்ளைக்கு காணச்செய்கிறான் உரிமையை விட்டுக்கொடுக்கிறான் எனக்கே எனக்கா என்று ஆசையாய் காதலித்த மனைவியின் அன்பை பிள்ளைக்கு விட்டுக்கொடுத்து பகிர்ந்து கொள்கிறான்.

சொத்தின் உரிமையை தம் பிள்ளைகளுக்காக தாரை வார்க்கிறான் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் செல்வ செழிப்புள்ள தந்தைக்கும் இந்த பழமொழி பொருந்தும் தாய் சோரூட்டினால் தந்தை அறிவூட்டுகிறான்.

தாயை மதிப்போம் அரவணைத்து வாழ்வோம் !

மு.செ.மு.சபீர் அஹமது
நன்றி : சேக்கனா M நிஜாம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.