தமிழகத்தின் முதன் முறையாக பெண்களின் பாதுகப்புக்கு திருப்பூர் காவல் துறை புதிய சாஃப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சென்னையை சேர்ந்த தனியார் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு [ செஃப்டி ராக் ] என்ற சமூக முயற்சி அமைப்பை தொடங்கி உள்ளது இதன் மூலம் புதிதாக ஒரு சாஃப்ட்வேரை அறிமுகம் படுதுகிறது.
இந்த அமைப்பின் சஃப்ட்வேரை பொதுமக்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் [ download ] செய்து கொள்ளலாம். அது முதல் பயணாளியின் பயண விவரம், இணைய தலம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனால் பயணாளி பயணிக்கும் சரியன இடத்தை உரிய நேரத்தில் துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும். ஏதாவது ஒரு அவசர நேரத்தில் தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையயோ அல்லது அச்சுருத்ததலையோ ! பயணாளர் உணரும்போது செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படுள்ள செஃப்டிராக் சஃப்ட்வேர் முலம் அவசர பொத்தானை கிளிக் செய்தால் போதும். உடனே SMS மற்றும் E-mail மூலமாக அவர்கள் ஏற்கனவே பதிவு செய்த உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தன்னுடைய ஆபத்தான நிலமையை தெரியபடுத்த முடியும்.
பயனாளரின் செல் பொனில் GPS வசதி இருந்தால் அவர் அப்போது இருக்கும் இடத்தின் விவரமும் SMS மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இதனால் அவர்களுக்கு நம் உடனடியக உதவி செய்ய முடியும். சேப்டிராக் சஃப்ட்வேர் GPS மற்றும் இணைய தளம் வசதி இல்லாத போதும் java சஃப்ட்வேர் போருத்திய செல் போனில் பயன்படுத்தலாம்.
சேப்டிராக் சாஃப்ட்வேரை பதிவிற்க்கம் செய்வது மிகவும் எளிதானது இந்த சஃப்ட்வேரை தொடர்பு கொள்ளவும் நிறுவவும் www.safetrac.in என்ற இணைய தளத்தில் தங்களது தகவல்களை தெரிவித்து பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு சரியக பதிவு செய்யப்பட்ட பயனாளருக்கு ஈ மெயில் மூலமாக சேப்டிராக் சாஃப்ட்வேரை எப்படி தன்னுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல்கள் பயனாளருக்கு அனுப்பி வைக்கப்படும்
சேப்டிராக் சமூக முயற்சி அமைப்பு என்பதால் soft wareஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் android soft ware உள்ள செல்போனில் சேப்டிராக் soft ware மூலமாக google இணையதள உதவியுடன்https://play.goole.com/store/apps/details? Id=com.src.saftrac என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்
பயணாளரின் இரகசியம் பாதுகாக்கப்படும் பயணாளர் தான் விரும் பொழுது தனது safetrac அப்ளிகேசனை click செய்யும் பொழுது தான் கண்காணிக்கப்படுவார்கள் click செய்யாத பொழுது அவர் இருக்குமிடம் மற்றும் விபரங்கள் கண்காணிக்கப்பட மாட்டாது பயணாளரின் பயன்பாடு பற்றிய விபரங்கள் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும்.
கடந்த வருடம் கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் 'காம் ஸ்மார்ட்' என்ற சாஃப்ட்வேர் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவழி தகவல் பரிமாற்ற சேவை மூலம் கமிஷனர் தனது லேப்-டாப் மூலம் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களை அனுப்ப முடியும். மேலும் இந்த சேவை மூலம் ஆணையர் தனக்கு கீழ் உள்ள இன்ஸ்பெக்டர் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற தகவலை, கம்ப்யூட்டர் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும். இந்த எஸ்.எம்.எஸ். சேவையில் மிகுந்த ரகசியம் காக்கப்படும்' என்பதும் குறித்த அறிவிப்பும் இவற்றை உருவாகிய சாஃப்ட்வேர் நிறுவனத்தார் சார்பில் அன்றைய நாளில் தெரிவிக்கப்பட்டது.
அன்பர்களே ! தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த விபரங்களை தெரிவியுங்கள் மற்றும் இந்தியா முழுவதும் இந்த சஃப்ட்வேர் தொழில் நுட்பம் வரவேண்டும். பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு நல்ல பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி சபீர் அகமது காக்கா அவர்களுக்கு இந்த கால சூழ்நிலைக்கு இப்படியெரு நவீன படைப்பும் தேவைதான்,இந்த உலகத்தில் அனியங்களும் அக்கரமங்களும் தலைவிரித்து ஆடுகிற கால கட்டத்தில் இன்று நாம் இருந்துகொண்டுயுள்ளோம் மனிதன் என்னதான் அறிவில் முன்னேற்றம் அடைந்தாலும், மனிதன் தன்னுடைய அறிவாலும் அறிவியளாலும் எப்படிப்பட்ட கருவிகளை கண்டுபிடித்தாலும் குற்றங்கள் குறைந்த பாடு இல்லை அக்கிரம்ங்கள் ஒளிந்த பாடு இல்லை அனியாய காரர்களும் அக்கிரமகாரர்களு குறைந்த பாடு இல்லை. நல்லவர்களும் சாந்தி சமதானத்தோடு வாழ விரும்புபவர்களும் . இந்த உலகத்தில் வாழ்வது என்பது ஒரு கேள்வி குறியான் காலம் தான் இது. உடம்பில் தேம்பு உள்ளது வசதி உள்ளது நம்மை கேட்பதற்க்கு யாரும் கிடையாது சட்டத்தையும் காவல் துரையையும் விலைக்கும் வாங்கும் அளவிற்க்கு அவர்கள் துனிந்துவிட்ட காரனத்தால் தான் இன்று குற்றங்கள் பெருகிகொண்டேயுள்ளது மனித உருவில் நடமாடும் மிருகங்கள்தான் இது போன்ற காரியங்களையெல்லாம் செய்கிறர்கள், அதே சமயம் அரசாங்கம் இன்னும் விழிபுணர்வுடன் செயல்பட வேண்டும் மது போன்ற போதை பொருள்களையும் குறைக்க வேண்டும், அதே சமயம் பெண்களும் ஆடை விசையத்தில் ஒரு மாற்றங்கள் அவசியம் கொண்டு வரவேண்டும் தன்னை பாது காத்து கொள்ள
ReplyDelete