Latest News

கேட்காதே...! கேட்காதே...!! பிச்சைக்காசு கேட்காதே !!!



வாலைக்குமர்களை சந்தை பொருளாக்கி
வரதட்சனை விலை பேசும் [ வலிமைமிகு] வாலிபர்களே !
வாழ்க்கைப் பாதையில் திசைமாறிய பறவைகளாய்
வழுக்கி விழுந்த ஓசைக்குயில்கள் எத்தனை எத்தனை ?
ஒழுக்கம் பேணும முதிர்க்கண்ணிகளாய் காசினியில்
ஓசையில்லாமல் ஓலைக்குடிசைகளில் முடங்கி,
ஏக்கப் பெருமூச்சுவிடும் ஈந்திலைகள் எத்தனையோ ?
பூப்படைந்த பருவச்சிட்டுகள் மூப்பெய்தி,
பருவம் தொலைத்து, கருகிய மொட்டுகளாய் 
உதிர்வதும் ஒப்பாமோ ?

உப்பரிகை வாழ்க்கை வாழ, மாடமாளிகை கூட கோபுரம்
உயர்ரக வாகனம், பங்களா இத்யாதி கேட்பதும் சரிதானே ?

ஏழைக்குமர்கள் வடிக்கும் சென்னீர் விடும்
ஏக்கப்பெருமூச்சு, ஏகமாய் வீட்டையும் நாட்டையும்,
இடிக்கும் கோடைகால இடிமின்னல் !
இலங்கும் கொதிகலனாய் கொதித்தெழ,
கூறுகெட்ட மோளைகளாய் கோழைகள் போல்,
குவலயத்தில் கைக்கூலி பெற்று 
வாழ நினைப்பதுவும் முறைதானா ?

வரதட்சனை சாவுகளின் விழுக்காடுகள் முப்பத்திஒன்பதாம்
வரதட்சணை வான்கொடுமை இருநூற்றி இருபத்தி ஐந்து
விழுக்காடுகளாம் ! வாழா வெட்டிகளாய் வறுமையில்
வாழ்விழந்த வனிதையர்கள் இந்த நாட்டில்...!
வெட்கமன்றோ !!

கஞ்சி குடிப்பதற்கிலார் கண்ணீர்க் கலசங்கள்
காற்றிலாட, சேற்றில் முளைத்த
செந்தாமரைக் கண்ணிகள் [ சோறின்றி ] செத்துமடியாமல்
செகத்தினில் காளையரே ! கைக்கொடுப்பீர்
வரதட்சனை தரித்திர பணம் வேண்டாம்
வாஞ்சையுடன் வனிதையர் வாழ்வில் சரித்திரம் படைப்பீர்
வாழ்வில் வளம் சேர்ப்பீர் ! 

வாங்கமாட்டோம், வரதட்சனை ! 
வாலிபர்களே சபதம் செய்வீர் !

கொடுக்க மாட்டோம் வரதட்சனை !
கோதையர்களே ! கொள்கைவழி சூளுரைப்பீர்

வாழ்வில் நலம் பெறுவீர் !!! வாழ்த்துவோம்
வாழ்வில் நலம் பெறுவீர் !!! வாழ்த்துகள்.

"புதுமைக்கவி"
அதிரை அப்துல் ரஜாக்
நன்றி : சேக்கனா M. நிஜாம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.