Latest News

அம்மம்மா...! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறதே !!


காட்டில் திரிந்த சில 
காண்டா மிருகங்கள்
இரண்டு கால் மனித
மிருகமாய் உருவெடுத்த
கதை இது ! 

இதில் 17வது குட்டி [ மிருகமும் ] 
பங்கு கொண்டது கொடுமையிலும்
கொடுமை, அருவருப்பான
ஒழுக்கக்கேட்டின் விழுமிய
வெளிப்பாடு.

இந்திய திருநாட்டின்
தலைநகர் டில்லி மாநகரில்
மருத்துவ [ முடக்கியல் ] மாணவி
யரின் பரிதாப நிலை
இந்த வெட்கக்கேடான
சம்பவம் இந்திய 
திருநாட்டிற்கு இல்லையா ?

இறைநெறியும், ஒழுக்க நெறியும்
ஒன்றிப்பிணைந்து ஆலமர 
விருட்சமாய் செழித்தது
மக்கள் உள்ளங்களில் அப்போதே
ஆனந்தம் அமைதியாய் குடி
கொண்டது. ஆனாலும் என்ன !?
தொடர் ஒழுக்க நெறி
தொய்வால் எற்பட்ட ஆளுமை
கலாசார சீரழிவிற்கு
அப்போதே கால்கோலும்
ஊன்றப்பட்டது.

மனித புனிதனாக மாற்றங்கள்
ஏற்றங்கள் பெற வேண்டிய
மானுடனை பொதுவில் 
மிருகமாக மாற்றங்கள் 
செய்யப்பட்டுவிட்டது. 

சாத்தானிய்யத்தின்
புறப்பாடு ! இது !!
மார்க்கத்தையும், மதத்தையும்
அதன் சரியான பாதையில்
பின்பற்றபடாமல், மனோ
இச்சையை பின்பற்றியதின்
நிலைப்பாடு !!!

கண்ணின் மணியாய்
உயரின் ஒளியாய்
ஓசையாய் ஒளிர வேண்டிய
தீபஒளியாம் கற்பை
அனைத்து மிருக இச்சையால்
வேட்டையாடிய போது...!
அம்மம்மா...! நினைக்கவே
நெஞ்சம் பதறுகிறதே !!

ஏ ! மனிதா , மானுடனே !!
நீ உயர்ந்த படைப்பாய்
உயர்த்தப்பட்டிருக்கிறாய்
வரம்பு மீறாதே !!

வரம்பு நீ மீறும் போது
எல்லாவற்றிற்கும்
மொத்தமாக ஒரு முடிவு
உண்டு. அது நிச்சயம்
இறை நாட்டத்தால்
வந்தே தீரும் நெடுங்
கயிற்றை இழுத்துக்
கொண்டு வரம்பு மீறாதே
அதன்படி இறைவனிடம்
இருக்கிறது என்பதை
மறவாதே ! கரை சேர
வழியைக் கண்டிடு !!

இறுதியாக ஒன்று
சொல்வோம் மருத்துவ
மாணவியின் மகத்தான
இழப்புக்கு காந்திஜி
சொன்ன சுதந்திரச்
செய்தியினை நினைவு
கூறுகிறோம் ஆட்சி
யாளர்கள் இனியாவது
சிந்திக்கட்டும் சீர்
பெறட்டும்.

"ஒரு பெண் நடுநிசியில் தனியாக வெளியில் சென்றுவிட்டு எப்போது பாதுகாப்பாக வீடு திரும்புவாளோ அப்போதுதான் முழுச்சுதந்திரம் நாம் பெற்றதாக அடையாளப்படுத்தப்படும்"

"புதுமைக்கவி" 
அதிரை அப்துல் ரஜாக்

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    எனது நண்பனி தந்தையே மரியாதைக்குறிய அப்துல் ரஜாக் காக்கா அவர்களின் கவிதை மிக அருமையான ஆழமான கவிதை எல்லோரையும் சிந்திக்கவைத்த கவிதை உங்களின் சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்

    பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் சினிமாக்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கடுமையாக சென்சார் செய்ய வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது....அதை முற்றிலும் தடை செய்ய வேண்டியதை தவிர வேறு வழியில்லை.

    அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது குற்றவாளிகளை உட்காரவைத்து சோறு போடும் சட்டங்களை அல்ல... இதே தவறு இனியும் நடக்காமல் இருக்க சட்டங்கள் கடுமையாகவில்லை என்றால் மக்கள் அரசாங்கத்தை நம்பமாட்டார்கள்....

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.