முகப்புத்தகத்தில் தினம் நீ முகம்பதிந்து...
அகம் மகிழச்செய்தாயே இனி உன் முகம்...
எங்கு காண்பேன் ..!
நய வஞ்சகனால் கொல்லப்பட்ட...
என் அருமை மருமகனே உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!
குடும்பம் சேர கொஞ்சிப்பேசி...
கரம் சேர்க்க நினைத்த உன்னை இனி...
எங்கு காண்பேன்...!
பார்ப்போரெல்லாம் உன் புகழ் சொல்லி...
பாராட்டிப்போற்றினரே உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!
மின்னலாய் ஒளிர்ந்து விட்டு...
மேகமாய் கலைந்தவனே உன்னை இனி ....
எங்கு காண்பேன்...!
கண்ணீரில் நனையவிட்டு...
மண்ணூரில் புதைந்தவனே உன்னை இனி...
எங்கு காண்பேன்...!
சிட்டாய் பறந்து திரிந்து ...
சுற்றிச்சுற்றி வந்த உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!
பட்டுப்போன நெஞ்சம் உன்னை...
விட்டுப்பிரிந்த பந்தம்....
தொட்டுக்கொள்ள வந்த நேரம்....
நீயும் தூர விட்டுச்சென்று விட்டாய்...!!!
உன்னை இனி எங்கு காண்பேன் ..!
என் வீட்டு ரோஜாவே...
என் அருமை ராஜாவே....
என் தங்க ஹாஜா வே ....
உன்னை இனி எங்கு காண்பேன்...!
கலங்கிய விழிகளுடன்...
உன் மாமா அதிரை மெய்சா
ஹாஜா என் மருமகனின் வகுப்புதோழன், வகுப்புதோழன் மட்டுமல்ல இனைபிரிய தோழன் என்றே சொல்ல வேண்டும் என் மருமகனுக்கு என்ன ஆருதல் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொல்ல வில்லை சற்று நேரம் கூட பிரிந்தே இருப்பது கிடையாது இன்று ஹாஜாவை பிரிந்து மன வேதனையில் நினைத்துகிடகிறான். மருமகனை தொலைப்பேசியில் அழைத்தபோது...கதறி அழுது கொண்டிருந்தான் ஆறுதல் சொல்லியும் அடங்காதவனாக...என் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் என்று....சகோ.மெய்சா தங்களின் வலியும் வேதனையும் நன்கு புரிகின்றது.. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து, தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகொலை செய்பவன்களுக்கு கூலி நிரந்தர நரகம்..!
ReplyDeleteநம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
அல்குரான்-4:93