அஸ்ஸலாமு அலைக்கும்
ஆசுரா நோன்பை பற்றி ஒரு சிறிய தகவல் ...........
இஸ்லாமியர்களிடையே ஆசுரா நோன்பு ஒரு முக்கிய அங்கம் வஹிக்கிறது . ஆசுரா என்றாலே 10 என்றுதான் பொருள் . இந்த பிறையில்தான் இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கும் பனுஇஸ்ரவேலர்களுக்கும் எதிரியாகவும் மேலும் நான்தான் உங்களின் உயிரினும் மேலான இறைவன் என்று தன்னை பிரகடனப்படுத்திய பிர் அவ்னய் அல்லாஹ் நைல் நதியில் மூழ்க செய்து மரணமுறசெய்த தினம் தான் இந்த ஆசுரா 10.
நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் காலத்தில், மூசா (அலை) அவர்களை நபியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்த யூதர்கள் பிரவ்ன் முழ்கி இறந்த தினத்தில் (முஹர்ரம் பிறை 10 ல்) ஆண்டுதோறும் நோன்பு வைத்துவந்தார்கள். இது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல் ) ஒரு நாள் ஒரு யூதனிடம் விளக்கம் கேட்டபோது பிரவ்னை அழித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அன்றைய தினம் நோன்பு நோற்பதாக அவன் சொன்னான்.
இதனை கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் இந்த நோன்பை நிறைவேற்ற உங்களைவிட நாங்களே தகுதியானவர்கள், அதேசமயம் உங்களுக்கு நாங்கள் மாற்றம் செய்யும் விதமாக முஹர்ரம் 10 மற்றும் அதற்க்கு முந்திய அல்லது பிந்திய தினத்தில் அதாவது முஹர்ரம் 9 அல்லது 11 சேர்த்து இரண்டு நோன்பு வைக்குமாறு தமது உம்மத்திற்கு உத்தரவிட்டார்கள். இந்த சுன்னத்தான நோன்பை நோற்கும் பொருட்டு கடந்த 1 வருட பாவத்தின் பரிஹாரமஹா அமையும் என்றார்கள். இப்படி இருக்கையில் தமிழகத்தில் ஆசுரா பிறை 9 மற்றும் 10, அதாவது 24 மற்றும் 25 தேதிகளில் நோன்பு நோற்குமாறு அறிவிப்பு செய்திருந்த சகோதரர்கள், 24 மற்றும் 25 அல்லது 25 மற்றும் 26 தேதிகளில் நோன்பு நோற்கும்படி அறிவிப்பு செய்வதுதான் நபிவழியாகும் ..... அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புடன்
சகாபுதீன். மலாக்கா , மலைசியா
No comments:
Post a Comment