டெல்லி: மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றை வாபஸ் பெற மாட்டோம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற முடியாது என்றும் இதனால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதிப்பதை மாநில அரசுகளே தீர்மானிக்கவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதை ஊக்கப்படுத்துவோம் என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இதே நேரத்தில் செபி உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்து வரும் வாரங்களில் மேலும் சில முக்கிய நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளன என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மமதா பானர்ஜியின் நெருக்கடிக்கு பணிந்து மத்திய அரசு கேஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாடுகளை மட்டும் விலக்கிக் கொள்ளு என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த யூகங்களுக்கு தற்போது சிதம்பரம் முற்றுப் புள்ளி வைத்திருப்பதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment