Latest News

  

நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்


சொற்பொழிவாற்றல்

1. உள்ளடக்கத்தைத் திட்டமிடலும் தயாரித்தலும்
  அ. படிப்படியான அணுகுமுறை
  ஆ. பயன்படும் தன்மையை அதிகரித்தல்

2. ஒப்புவிக்கும் நுட்பங்கள்: முக்கிய அம்சங்கள்
   அ. பயிற்சி
   ஆ. உடல் மொழி, குரல் மூல மற்றும் பார்வை மூலத் தொடர்பு
   இ. பேச்சை நிறுத்துதல்
    ஈ. சொற்பொழிவாளரின் சுய தோற்றம்

3. கேள்வி -பதில்: சவால்களும் சந்தர்ப்பங்களும்
4. பயன்படும் சொற்பொழிவிற்கான மாதிரிகள்
5. சொற்பொழிவிற்கான சரிபார்க்கும் பட்டியல் (Cheek List)

1. உள்ளடக்கத்தை திட்டமிடுவதும் தாயாரிப்பதும்
     அ. படிப்படியான அணுகுமுறை
1. ஆரம்பத்தில் கருத்தில் கொள்ள  வேண்டியவை

கேட்போரை அறிந்துகொள்ளுங்கள்

ஓரு உரையை திட்டமிடுவதற்கு முன் முதலாவதாக கேட்போரைப் பற்றி அறிந்துக் கொள்வது அந்த மக்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? சமூக வாழ்நிலை சூழல் இவைகள் தெரிந்திருந்தால் மிக அழகாக அவர்களில் ஒருவனாக நின்று நாம் பேச முடியும்.நேர காலத்தோடு வந்து பிந்திச் செல்வது, கேட்போருடன் நெருக்கமான இணைப்பை ஏற்படுத்தவும் அதனால் பேச்சின் மூலம் மேலும் சிறந்த கருத்து பரிமாற்றம் நிகழவும் உதவும்.மாற்று கருத்துடையோருடன் உரையாடுவதினால் அவர்களது கருத்துக்களையும் பெயர்களையும் எமது சொற் பொழிவில் குறிப்பிடுவதன் மூலம் அவர்களது அபிப்பிராயங்களை நாம் மதிப்பதை எடுத்துக் காட்டலாம். சொற்பொழிவில் வழங்கப்பட்ட கருத்துக்களை அழுத்திச் சொல்வதற்கும் இது போன்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முடியும்.

பேச்சின் கட்டமைப்பு 
 ஒரு சொற்பொழிவின் பொதுவான மாதிரியொன்றை புறவரை (out line) கிழே தரப்படுகின்றது. ஆயினும் எல்லா சந்தர்ப்பங்களுக்குமே பொருத்தமானதென இதனைக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட  சந்தர்ப்பம் அல்லது தலைப்பு காரணமாக வேறொரு கட்டமைப்பிலான சொற்பொழிவு, தேவைப்படலாம். எப்போதும் நன்கு தொகுக்கபட்ட ஒன்றிணைந்த ஒரு சொற்பொழிவின் மூலம் நமது செய்தியைத் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

விஷயத்தை எடுத்துக் கூறல் 

பேச்சின் தொனிப்பொருளை எடுத்துக் கூற வேண்டும். அதன் அடிப்படை அம்சங்களை விவரித்து அதன் தலைப்பை விளக்க வேண்டும் ஒரு பிரச்சனை சமூகத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது எனவும், கேட்போர் இது பற்றி ஏன் அக்கறை செலுத்த வேண்டும் விளக்க வேண்டும்.

பொருளை பகுத்தாய்தல்

வரலாற்றுப் பின்னணியை விளக்கி கடந்த காலத்திலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளை எடுத்து கூறலாம். நிகழ்வுகள் இடம்பெற்ற காலத்தின் அடிப்படையைக் கொள்ளாமல் சொல்லப்படும் விஷயங்களின் அடிப்படையில் பேச்சின் உள்ளடக்கத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்வது பயனுள்ளதாக அமையும். நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனையானது இன்று ஏன் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது என்பதை கேட்பவர்கள் தெளிவாக விளங்க வேண்டும்.

முந்தைய தீர்வுகள் பற்றி விளக்குதல் 

சாத்தியமாகுமிடங்களில், குறிப்பான கடந்த காலச் சம்பவங்களைப் பரீசீலனை செய்யலாம். அவை நமது சமூகத்திருலிருந்தோ அல்லது பிற சமூகத்திற்கு தொடர்புள்ளதாக இருக்கலாம். அச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அவற்றின் வெற்றி அல்லது தோல்வியின் அடிப்படையில் ஆராயுங்கள். பிரச்சனை முற்றிலும் புதிதாக இருந்தால் கடந்த காலப் பிரச்சனைகளுடன் ஒப்பிட்டுக் கலந்துரையாடலாம். 

நன்கு திட்டமிட்ட ஒரு உரையானது திருப்திகரமான முன்னுரையுடன் ஆரம்பிப்பதோடு, முக்கியமான அம்சங்களை கொண்டதாக இருக்கும். அத்தோடு பொருத்தமான முடிவை அல்லது  சாராம்சத்தை வழங்குவதோடு, குறித்து ஒதுக்கப்பட்ட கால இடைவெளியில் அது நிறைபெறும். நமது முழுப் பேச்சையும் சமர்ப்பிப்பதற்குரிய விதத்தில் நாம் நமது நேரத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தேவையான போது பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் கருத்துக்களையும் தரவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

2. சொற்களை தேர்ந்தெடுத்தால்
  
முடிந்த அளவுக்கு மிகச் சிறந்த சொற்களை எப்போதும் பயன்படுத்துங்கள். முதிர்ச்சியுறாத மொழிப் பாவனை நம்மைப் பண்படாதவராக உடனே இனங்காட்டிவிடும். நிகழ்காலப் பேச்சு வழக்கிலுள்ள மொழி நடை பிரயோகம்,
எளிமையான மக்களுக்கு விளங்கும் சந்தர்ப்பவங்களும் இருக்கவே செய்கின்றன ஆயினும் அவை கவனமாகத் தெரிவு செய்யப்பட்டுப் பயன்படுத்த வேண்டும்.

முறையாக பயனப்டுத்தபடுகிற பயந்தரக்கூடிய “நேர்த்தியான சொற்பொழிவுக்குரிய சில சுருக்கமான மாதிரிகள் கிழே தரப்படுகின்றன.

*  முக்கிய அம்சங்களை அழுத்தி மீண்டும் கூறுவது. (சிறப்பாக மூன்று முறை)

* சொற்களை தெர்வு செய்யும் போது ஓசை ஒழுங்குடன் கூடிய போக்கைக் கருத்திற் கொள்வது.

* பேச்சு தாளத்தோடு அமையும் வண்ணம் எதுகை, மோனைகளை பயன்படுத்தலாம்.

*  ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு மக்கள் நினைவிற் கொள்ளத்தக்க சாதுரியமான வசனத் தொடர்களைப் பிரயோகித்தல்.

*  சிக்கலான கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு உவமையணிகள், உருவகங்கள் ஒப்பீடுகள்,குட்டிக்கதைகள் முதலியவற்றை பயனபடுத்துதல்.

*  பேச்சாளர் கொண்டுள்ள  நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தும் புள்ளி விவரங்களைக் கையாள வேண்டும்.

*  அறிவையும் உணர்வையும் எழிச்சியுறச் செய்யும் செய்வினை, செயல்வினைகளை உபயோகப்படுத்தலாம்.

*  ஆரமபத்தில் கேட்போர் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கூற்றுகளை முன்வைத்தல். இறுதியில் நாம் பேசிய எடுத்துக் கொண்ட கருப்பொருளை கேட்போரிடமும் நன்கு பதியச் செய்து நினைவிலிருத்தக் கூடிய முடிவுரையை வழங்குதல்.

அதேவேளை சில கூற்றுகள் பேச்சின் போது தவிர்க்கப்பட வேண்டும். அவைகளை அடுத்த தொடரில் பார்ப்போம். (தொடரும்)
நன்றி : வலையுகம் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.