இஸ்லாமாபாத்: இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்துள்ள பாகிஸ்தான் நாட்டின் தலைநகரில் இந்துக்களுக்காகக் கோயில் கட்ட பாகிஸ்தான் பிரதமர் அஷ்ரப் அனுமதியளித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியில் உள்ளது. பிரதமராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த இந்து எம்.பி.யான ரமேஷ்லால், பிரதமர் அஷ்ரப்பினை சந்தித்து, தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இந்து கோயில் கட்ட அனுமதியளிக்குமாறு கோரிக்கைவிடுத்தார். இக்கோரிக்கையை ஏற்ற பிரதமர், தலைநகரில் இந்து கோயில் கட்டத் தகுந்த இடம் தேர்வு செய்ய இஸ்லாமாபாத் மேம்பாட்டு ஆணையத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் நகரில் பழைமையான சில இந்துக்கோயில்கள் இருந்தாலும், அவை மக்களின் வழிபாட்டில் இல்லை. இந்நிலையி்ல் புதிய கோயிலுக்கான முறையான உத்தரவு பிரதமர் அலுவலகத்திலிருந்து இஸ்லாமாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்திடம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment