Latest News

  

அதிரையில் புதியதோர் உதயம் ! 24 மணி நேர மருந்தகம் !!



அதிரையில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வந்தது. டாக்டர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளன. இதற்காக அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன.

அதிரை மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமைந்துள்ளது நமதூரில் புதிதாக திறந்துள்ள '24 மணி நேர மருந்தகம்'

24 மணி நேர மருந்தகத்தின் சிறப்புகள் சில:

1. 24 மணி நேர மருந்தகச் சேவை

2. முதலுதவிக்கென்று தகுதியுள்ள செவிலியர் ( நர்ஸ் )

3. இலவச டோர் டெலிவரி

4. வெளிநாட்டில் வாழும் உள்ளூர் சகோதரர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச டோர் டெலிவரி வசதி.

5. விரைவில் தகுதியுள்ள டாக்டர்களை மருந்தகத்திலே பணி நியமனம் செய்வதற்கு முயற்சித்தல்.

போன்ற சேவைகளுடன் அதிரை மக்களின் நல்ல ஒத்துழைப்பை பொறுத்தே தங்களின் மருத்துவ சேவைகள் தொலை நோக்குப் பார்வையுடன் மேலும் வலுப்படுத்தப்படும்' என அதன் உரிமையாளர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்

2 comments:

  1. நல்ல முயற்ச்சி யார் இந்த முயற்சியை செய்திருந்தாலும் அவர்களுக்கு என் நன்றி அதிரையின் நீன்ட நாட்கள் ஏக்கம் இப்பொழுது நிறைவடைந்துள்ளது உங்களின் சேவை மேலும் சிறக்க வாழத்துக்கள்.

    எந்த இடம் தொடர்பு என் இவைகளையும் தெரிவித்தாள நன்றாகயிருக்கும்.

    ReplyDelete
  2. எந்த இடம் தொடர்பு என் இவைகளையும் தெரிவித்தாள நன்றாகயிருக்கும்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.