குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் அல்லாத ஒருவரை நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப்முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியையே வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் அல்லாத ஒருவரை அப்பதவிக்கு நிறுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததன் மூலம் ஹமீத் அன்சாரிக்கு தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து தன் நிலைப்பாட்டை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளதாக பிரகாஷ் காரத் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment