Latest News

  

அசாம் கலவரம் - ராணுவம் கொடி அணிவகுப்பு

குவஹாத்தி - அசாம் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் கலவரத்தை தடுப்பதற்காக ராணுவம் போடோ பகுதி மாவட்டங்களில் அடையாள கொடி அணிவகுப்பு நடத்தியது.
இந்த அணி வகுப்பு, கோக்ராஜர், சிராங்,பக்ஸா மற்றும் உடல்குரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. கடந்த ஜூலை 19 முதல் இங்கு நடைபெற்று வரும் கலவரத்திற்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.  போடோ இனப் பழங்குடியினருக்கும், பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வன்முறையினைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.கோக்ராஜர் மற்றும் சிராங் மாவட்டங்கள் பூடான் நாட்டின் எல்லை அருகில் உள்ளது.

கடந்த 19 ஆம் திகதி மகுர்பாரி என்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து நான்கு போடோ தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிராங் மாநிலத்திலுள்ள மகான்குரி,கோயாரிபரா,சோய்ராபாரி,மஜ்ராபாரி மற்றும் பவ்ராகுரி ஆகிய ஐந்து கிராமங்கள் நேற்று (24.07.2012) வன்முறைக்கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  இந்த கலவரத்தினால் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் உள்ள பிரமுகர்களைக் கொண்டு அமைதிக்குழு அமைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 4000 படை வீரர்கள் கலவரப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவும் இந்தப் பகுதிகளை பார்வையிட உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் அசாம் முதல்வர் தருண் கோகோயிடம் தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.