Latest News

புனித ரமலானில் AAMF-ன் தலைமையில் நோன்பு கஞ்சி விநியோகம்.



துபாய்-டேரா பகுதி அதிரைவாசிகளுக்கு ஓர் வேண்டுகோள்.
 பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பராக்காதுஹு.
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! கடந்த வருடம் ரமலானில் அடித்தளமிடப்பட்டு துபாய் கிரஸண்ட் பள்ளியில் தொடங்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) கடந்த ஒருவருடமாக அதிரைவாசிகளை ஒருங்கிணக்கும் முயற்சியாக அதிரைக்கு உட்பட்ட 9 முஹல்லாஹ்களிலும் மாதம் ஒன்றாக கலந்தாய்வு மற்றும் ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்!.

உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகள் பல்வேறு தொடர்புகள் மூலம் ஒருங்கிணைத்து ஊரளவிலான திட்டங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளை பின்னணியில் ஈடுபட்டுவருகிறது.

எதிர்வரும் ரமலானில் துபாய் டேரா பகுதியிலுள்ள வாழைமரத்தடிப் பள்ளியில் இஃப்தாரின்போது நோன்பு கஞ்சி  விநியோகிக்கும் பொறுப்பை துபாயின் பிரபல இஸ்லாமிய அமைப்பான ஈமான் (IMAN) அமைப்பு நமது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டதன்பேரில், அவர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று, அல்லாஹ்வின் பொருத்தம்நாடி இன்ஷா அல்லாஹ் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி பரிமாற  ஒப்புக்கொண்டுள்ளோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரையின் அடையாளமாக அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு திகழ்வதாகவே இந்த வாய்ப்பு நமக்கு உணர்த்துகிறது (அல்ஹம்துலில்லாஹ்).  நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்து நன்மையைக் அள்ளிச்செல்லும் இந்த உன்னத பணிக்கு ஆர்முள்ள அதிரைவாசிகள் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தயார் நிலையில் உள்ள அடையாள அட்டை மற்றும் பிற ஏற்பாடுகளைச் செய்ய ஏதுவாக இருக்கும்.

தலைவர்                                                 செயலாளர்
050-7480023                                                   050-4963848

இப்படிக்கு,
AAMF நிர்வாகம்
அமீரக கிளை

1 comment:

  1. இது ஒரு நல்ல முயற்சி. ஏகன் அல்லாஹ் இந்த நன்மையான கரியத்தைப் பொருந்திக் கொள்வானாக. மேலும் குர் ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்.ஷிர்க் பித் அத்கள் அனைத்தும் மார்க்கத்திற்கு முரணானவை என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்து அதன்படி செயல்படவும் ஏகன் அல்லாஹ் உதவி செய்வானாகவும் எனவும் பிரார்த்திக்கின்றேன்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.