சென்னை: அமைச்சர் பதவியிலிருந்தும், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட 2 முக்கியக் காரணங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதில் ஒரு காரணம் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இன்னொரு காரணம்தான் மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.
கே.ஏ.செங்கோட்டையனிடம் முன்பு பி.ஏவாக இருந்தவர் ஆறுமுகம். இவரது மனைவியுடன் கே.ஏ.செங்கோட்டையனுக்குத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாக ஆறுமுகம் மற்றும் அவரது தரப்பு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து புகார்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் போனது. இதையடுத்து செங்கோட்டையனின் மகன் கதிரீஸ்வரன், தனது தாயாருடன் ஜெயலலிதாவை சந்தித்து தனது தந்தையின் செயல் குறித்து குமுறலுடன் முறையிட்டார். இதையடுத்து செங்கோட்டையனைக் கூப்பிட்டுக் கடுமையாக கண்டித்தார் ஜெயலலிதா.
மேலும் ஆறுமுகம் உள்ளிட்ட 3 அரசு பி.ஏ.க்கள் உடனடியாக நீக்கப்பட்டனர். ஆறுமுகம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அதிரடியாக கைதும் செய்யப்பட்டார்.
மேலும், செங்கோட்டையனின் துறையையும் மாற்றிய ஜெயலலிதா, அவரை வருவாய்த்துறை அமைச்சராக மாற்றினார். இதனால் சற்று அப்செட் ஆனார் செங்கோட்டையன். இருப்பினும் அவர் சுதாரித்துக் கொண்டு சிறிது காலம் அமைதியாக தனது வேலைகளைப் பார்த்து வந்தார்.
இடையில் தனது மனைவியுடன் கோவிலுக்குப் போய் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு அதன் போட்டோவையெல்லாம் பத்திரிக்கைளில் வரச் செய்தார். இதன் மூலம் தான் திருந்தி விட்டதாக அம்மாவை நினைக்க வைத்தார் செங்கோட்டையன். ஜெயலலிதாவும், நடந்ததை மறந்து செங்கோட்டையனை தொடர்ந்து நல்ல அந்தஸ்தில்தான் வைத்திருந்தார்.
ஆனால் செங்கோட்டையன் மீண்டும் தனது சேஷ்டையை காட்ட ஆரம்பித்தார். இந்த முறை அவரது சேஷ்டை மிக முக்கியமான இடத்தில் இருந்துள்ளது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல் பிரசாப் பணியில் பொறுப்பாளராக இருந்த செங்கோட்டையன் போன இடத்தில்தான் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
அந்த இடைத் தேர்தல் ஜெயலலிதா மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த தேர்தலாகும். அதில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை தொகுதியிலேயே தங்க வைத்து பணிகளை முடுக்கி விட்டிருந்தார்.
அந்த சமயத்தில்தான் செங்கோட்டையன் தனது புதிய உறவை ஏற்படுத்தி விட்டார். அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவரை மிகப் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சென்னைக்குக் கொண்டு சென்று அம்மா முன்பு நிறுத்தி நல்ல பெயரையும் வாங்கினார்.
அதன் பிறகு தனது புதிய உறவுக்கு சென்னை தாம்பரத்தில் பெரிய வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஊருக்கெல்லாம் போக வேண்டாம், இங்கேயே தங்கிக் கொள் என்று அவருக்கு உத்தரவும் போட்டுள்ளார். இதனால் அந்தப் புதிய உறவும் தாம்பரத்திலேயே தங்கத் தொடங்கியது. செங்கோட்டையனும் அடிக்கடி அங்கு வந்து போகத் தொடங்கினார்.
இதை அறிந்து செங்கோட்டையன் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சனியனை விட்டு விட்டு இன்னொரு சனியனை பிடித்து விட்டாரே என்று செங்கோட்டையனின் மனைவி கண்ணீர் வடித்தார். சரியாக சாப்பிடக் கூடத் தோன்றாமல் விரக்தி அடைந்தவராக அதிர்ந்து போய் நின்றார் அப்பெண்மணி. இதைப் பார்த்து செங்கோட்டையனின் மகனும் பெரும் சோகமானார்.
இனியும் பொறுக்க முடியாது என்று முடிவு செய்த அவர் தனது தாயாரைக் கூப்பிட்டுக் கொண்டு முதல்வரை மீண்டும் பார்த்தார். இம்முறை வேறு ஒரு புகாருடன் அவர்கள் வந்து நின்றதைப் பார்த்த முதல்வருக்கே பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். குறிப்பாக செங்கோட்டையன் பிடித்துள்ள உறவு குறித்து அறிந்த அவர் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தாராம்.
முதல்வரை சந்தித்து நடந்ததையெல்லாம் சொன்ன கதீரீஸ்வரன், எங்களுக்கு அமைச்சர் வேண்டாம்மா, அப்பாதான் வேணும்மா என்று கண்ணீர் மலக் கூறியதைக் கேட்டு முதல்வரே நெகிழ்ந்து போய் விட்டாராம்.
இதையடுத்து உடனடியாக முடிவெடுத்த ஜெயலலிதா, தற்போது செங்கோட்டையனிடமிருந்த அத்தனை பதவிகளையும் பறித்து விட்டார் என்கிறார்கள். செங்கோட்டையன் இனியும் ஒழுங்காக இருக்காவிட்டால் அவரைக் கட்சியிலிருந்தும் கூட தூக்கவும் ஜெயலலிதா தயங்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.
தற்போது செங்கோட்டையனுடன் உறவு வைத்துக் கொண்ட அந்தப் பெண்மணி மீது முதல்வரின் கோபம் திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள். விரைவில் அவருக்கும் சரியான வசவு கிடைக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்தப் பெண் பெரும் டென்ஷனில் இருக்கிறாராம்.
No comments:
Post a Comment