டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் முதலில் சங்மாவுக்கு ஓட்டுப் போட்டுவிட்டார். பின்னர் தாம் தவறுதலாக ஓட்டுப் போட்டதாகக் கூறி வேறு ஒரு வாக்குச் சீட்டு வாங்கி பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்திருக்கிறார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை வாக்களிக்க வந்தார் முலாயம்சிங் யாதவ். அப்போது அவரிடம் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில் டக்கென பி.ஏ.சங்மா பெயருக்கு நேராக கிளிக் செய்துவிட்டார். பின்னர் அவர் தம் தவறை உணர்ந்தவராக மற்றொரு வாக்குச் சீட்டுக் கேட்டிருக்கிறார். இதற்கு தேர்தல் அதிகாரி அனுமதி அளித்திருக்கிறார். 2-வதாக வாங்கிய வாக்குச் சீட்டில் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்திருக்கிறார் முலாயம்சிங்.
இதனிடையே குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. கனு கன்சதியா, அம்மாநிலத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இன்னு என்னென்ன கூத்துகள் வெளிவரப்போகிறதோ!
No comments:
Post a Comment