Latest News

தொடரும் இஸ்ரேலிய சிறைகளில் அப்பாவி கைதிகளின் மீதான சித்ரவதைகள்.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

இஸ்ரேலிய தீவிரவாதிகள் ஃபாலஸ்தீனப் பகுதிகளில் அத்துமீறி நுழையும் பொழுதெல்லாம் அவர்களுடைய கைகளில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக்களில் முதியோர்கள், சிறியோர்கள், பெண்கள் போன்ற பலஹீனர்களை பிடித்து இழுத்துச் சென்று சிறைக் கூடங்களை நிரப்புவது வழக்கமாக இருந்து வருவதை இஸ்ரேல் என்ற ஒரு நாடு ஃபாலஸ்தீனப் பகுதியில் வரம்பு மீறி உருவாக்கபட்டதிலிருந்தே அறிந்த வருகிறோம்.  

ஆயுதம் தரித்து தாய் நாட்டு சுதந்திரத்திற்காகப் போரிடும் வலிமை வாய்ந்த வீரர்களின் மீது ஏவுகனை செலுத்தித் தாக்குவதும், ஆயுதம் தரித்துப் போரிட முடியாத பலஹீனர்களைப் பிடித்து சிறையில் தள்ளி சித்ரவதை செய்வதும் இந்த கோழைகளின் வாடிக்கையாக இருந்து வருவதையும் பாரத்து வருகிறோம்.

இந்த அத்து மீறல்கள் யாவும் உலக ஊடகங்கள் அனைத்திற்கும் தெரியும் ஆனாலும் அவைகள் இந்த அப்பாவிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்ததே இல்லை, குரல் கொடுக்க வில்லை என்றாலும் பரவா இல்லை இந்த அப்பாவிகளை தீவிரவாதிகள் என்று எழுதாமல் இருந்தாலாவது பரவா இல்லை.   

இவர்களுக்கு ஆப்கான்- பண்ணாட்டுப்படைகள், ஈராக்- பண்ணாட்டுப்படைகள், ஃபாலஸ்தீன-இஸ்ரேலியர்களின் மோதல் சம்மந்தப்பட்ட செய்திகள் கிடைத்து விட்டாலேப் போதும் அதில் இருக்கின்ற நியாயம், அநியாத்தை அலசிப் பார்க்காமல் எடுத்த எடுப்பிலேயே ஆக்ரமிப்பாளர்களை வீரர்கள் என்றும், தாய் நாட்டு விடுதலைக்காப் போரிடுபவர்களை தீவிரவாதிகள் என்று எழுதுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. (இது தொடருவது பத்திரிகை தர்மத்திற்கு அழகல்ல ).

இஸ்ரேலியர்களின் பயங்கரவாத மொசாத் அமைப்பிற்கும் உலக (பாசிஷ) ஊடகவியாளர்களுக்கும் மத்தியில் அறுபடாத தொடர்பு ஒன்று இருப்பதாக ஏற்கனவே நாம் படித்து வந்ததை மேற்காணும் மதவெறி சொற் பிரயோகங்கள் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது. ( வல்ல அல்லாஹ் இதற்கு ஒரு முடிவை எழுதியே வைத்திருப்பான் ). 

சிகிச்சை மறுக்கப்பட்ட காட்டுமிராண்டித் தனம்.
சமீபத்தில் இஸ்ரேலிய சிறையில் லீனா ஜெர்பூனி என்ற பெண் கைதியின் கல்லீரலில் கட்டி ஒன்று உருவாகி கடும் அவஸ்தை அடைந்துள்ளார் அப்பெண்ணின் நிலையை அறிந்த சக பெண் கைதிகள் சிறை பொறுப்பாளர்களிடம் அவரது நிலையை எடுத்துக் கூறி சிகிச்சைக்காக மன்றாடி கேட்டுள்ளனர்.

எவ்வளவோக் கெஞ்சிக் கேட்டும் அவர்களின் கல் நெஞ்சம் கறைய வில்லை அவரது சிகிச்சைக்காக அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து அனைத்துப் பெண் கைதிகளும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். அதனால் வேறு வழி இன்றி அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் லீனா ஜெர்பூனி .

ஆனாலும் ஈரலில் அறவே ஈரமில்லாத இந்த ஈனப்பிறவிகள் அவருடைய கால்களையும், கைகளையும் மருத்துவமனைக் கட்டிலில் சங்கிலியால் பிணைத்து கட்டி விட்டு உயர் சிகிச்சைக்கான மருத்துவர்களை அனுக விடாமல் தடுத்துக் கொண்டனர். 

கல்லீரலில் கட்டி ஏற்பட்டவர் உடல் ரீதியாக என்ன மாதிரியான வேதனையை அனுபவிப்பார் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை இந்த ஈனச் செயலை செய்த இஸ்ரேலிய ஈனப் பிறவிகளுக்கும் இது தெரியாததல்ல ஆனாலும் சித்ரவதை செய்து துடிப்பதைத் கண்டு அக மகிழும் ஆணவக் காரர்கள் அவர்கள் என்பதால் வேண்டுமென்றே செய்வார்கள்.

உடனடியாக லீனா விஷயத்தில் துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டு கல்லீரலில் உருவானக் கட்டி அகற்றப்பட வில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பாலஸ்தீன கைதிகள் பாதுகாப்பு மையம் கவலை தெரிவித்துள்ளது. 

அப்பாவி பெண் கைதிகள் மீதான சித்ரவதை என்பது இது மட்டும் புதிதல்ல இதற்கு முன்பும் பல முறை இஸ்ரேலிய சிறைக் கூடங்களில் நடந்துள்ளன.

ஆயுள் கைதியாக பத்து வயதுப் பாளகன்.
இஸ்ரேலில் இயங்கும் அஸ்கலான் என்ற சிறையில் ஆயுள் தண்டனையை கழிக்கும் ஹிஸாம் என்ற தனது பத்து வயது சகோதரனை காணச் சென்ற சம்ஹா ஹிஜாஸ் என்ற பெண்ணை கையில் செல்போன் வைத்திருந்ததாகக் கூறி அவரை கைது செய்து கொலை காரக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைத்து அக மகிழ்ந்தனர் யூத குறுமதியாளர்கள். 


இதேப்போன்று இதற்கு முன்பொரு முறை வேறொரு சிறையில் நான்கு பெண் கைதிகளை செல்போன் வைத்திருந்ததாகக் கூறி இஸ்ரேலிய 10 பெண் காவலர்கள், 5 ஆண் காவலர்கள் முன்னிலையில் 6 மணி நேரம் தனித் தனியாக நிர்வாணப் படுத்தி சோதனையிடப் பட்டுள்ள நிகழ்வையும் அறிந்திருக்கிறோம்.  

அந்த ஆறு மணி நேரமும் அவர்களுக்கு  உணவு, தொழுகை, இயற்கை உபாதைப் போன்ற எதற்கும் அனுமதிக்கப்படவில்லை. (இறுதிவரை அவர்களிடமிருந்து எந்த செல்போனும் கண்டெடுக்கப்பட  வில்லை என்பது கூடுதல் தகவல்.).  


நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி அந்த அப்பாவிகளை சித்ரவதை செய்து அக மகிழ வேண்டும் என்பது மட்டுமே அந்த காட்டு மிராண்டிகளின் நோக்கமாகும். இவ்வாறான சித்ரவதைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இஸ்ரேலிய தீவிரவாதிகள் மண்ணின் மைந்தர்களாகிய ஃபாலஸ்தீன அப்பாவி மக்களின் மீது நடத்தி வரும் சித்ரவதைகளுக்கு ஒரு சில தொண்டு நிறுவனங்களைத் தவிர ஐ.நா.முதல் உலகில் இயங்கும் பிரபல ஊடகங்கள் வரை யாரும் இதுவரை குரல் கொடுத்ததில்லை.

சிறைக் கைதிகள் மீது இந்த ஈனப் பிறவிகளின் அத்துமீறல்கள்

To: அதிரை ஃபாரூக் <adhiraifarouk@gmail.com>

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.