தற்சமயம் உலகின் உயரமான கட்டிடமாக விளங்குவது துபாயிலுள்ள புர்ஜ் கலீஃப கட்டிடமாகும்.
சுமார் 830 மீட்டர் உயரமுடைய இக்கட்டிடத்தை விடவும் குறைந்தது 600 அடிகள் உயரமாக ஜெத்தாவில் ஒன்றரை கி.மீ உயரத்துக்கு கிங்டம் டவர் என்னும் கட்டிடத்தை சவூதி அரேபியாவின் பெரும் செல்வந்தரான இளவரசர் வலீத் பின் தலால் கட்டுவதற்கு உள்ளார்.
சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட உள்ள இக்கோபுரக் கட்டிடம் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று கடந்த ஆண்டே திட்டமிடப்பட்டது.
இக்கட்டிடத்திற்கான மாநகராட்சி அனுமதி ஆவணங்கள் அனைத்தும் பிப்ரவரி மாதமே பெறப்பட்டுவிட்டன. ஜெத்தா பொருளாதார நிறுவனம் என்ற பெயரில் ஐந்து நிறுவனங்கள் கூட்டாக இக்கட்டுமானத்தில் பங்களிக்கின்றன.
No comments:
Post a Comment