குண்டுஸ் : பெண் குழந்தைகள் கல்வி கற்பதை தடுப்பதற்காக பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததால் அதை குடித்த பெண்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நெஞ்சை உலுக்கும் இச்சோக சம்பவம் ஆப்கானிஸ்தானில் தான் நடந்துள்ளது. விஷம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த 150 பெண் மாணவிகளில் சிலர் தலைவலியாலும் சிலர் வாந்தி எடுத்தும் அவதிப்பட்டதால் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஆப்கன் கல்வி துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் முஹமது நபிஜதா “ பள்ளி மாணவிகள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் விஷம் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது கண்டிப்பாக பெண்கள் கல்வி கற்பதை பிடிக்காத குழுக்கள் தான் செய்திருக்க வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment