பெங்களூர்: அரசுத் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தரப்பட வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆவணங்களை படித்துப் பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்க பல்வேறு முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. (சசிகலாவிடம் விசாரணை ஆரம்பித்த சமயத்தில் தான் அவரை ஜெயலலிதா பிரிந்தது, சொந்தங்கள் கைது, பின்னர் சசி மட்டும் மீண்டும் போயஸ் கார்டன் வந்தது என 'மெகா தொடர் நாடகம்' நடந்தது). இதுவரை சசிகலாவிடம் 504 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. அவர் மிக சாவகாசமாக பதில் சொல்லி வருவதால், பதில்கள் பதிவு செய்வதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று கோரி சசிகலா சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அது நிராகரிக்கப்படவே, அதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அங்கும் சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
இந் நிலையில், இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர்.
அப்போது ஜெயலலிதா, சசிகலா சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆவணங்களை படித்துப் பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதுவும் வழக்கை இழுத்தடிக்கும் இன்னொரு முயற்சி என அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவித்தார்.

No comments:
Post a Comment