Latest News

அதிரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் !


தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரைப்பட்டினம் பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு, ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 & 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிட்டு இதை செயல்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிரைக்கு புதிய பேருந்து நிலையம் !
அதிரைக்கு பாதாள சாக்கடைத் திட்டம் !
அதிரைக்கு அகலரயில் பாதைத் திட்டம் !
அதிரைக்கு புதிய தீ அணைப்பு நிலையம் !

என்ற மேலே உள்ள அரசு மற்றும் அரசு பிரதிநிதிகளால் வெறும் அறிவிப்புகள்  மாத்திரம்  செய்து “அடக்க”மாக அடங்கிப் போய்விட்டதுபோல் இக்குடிநீர் திட்டமாவது “மகிழ்ச்சி”யாக செயல்படுத்த வேண்டும் என்பதே அதிரை பொதுமக்களின் எதிர்பார்ப்பு !


இதையாவது “ஜீ”க்கிரம் கொண்டுவந்துருங்கோ !

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.