Latest News

“இல்லாத” கரண்டுக்கு ஏகப்பட்ட “ரேட்” !

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்தது.

இந்த மின்கட்டண உயர்வு, 37 சதவீதம் வரை இருக்கும் என்றும், இது ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேவேளையில், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மின்கட்டண உயர்வு விவரம் :

வீடுகளுக்கு...........................

* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,

* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)

* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80

* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3

* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50

* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில்  200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3

* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.

* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75


தொழிற்சாலைகளுக்கு.........................

தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.


வர்த்தக நிறுவனங்களுக்கு........................... 

* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30

* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்

* அலங்கார விளக்குகள் பயன்படுத்தினால் - ரூ.10.50


குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு.............................

* 500 யூனிட் வரை - ரூ. 3.50

* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4



வழிபாட்டுத் தலங்களுக்கு...................................

* 120 யூனிட் வரை ரூ.2.50

* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5



விசைத்தறி கூடங்களுக்கு................................ 

* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.

* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4


கல்வி நிறுவனங்களுக்கு.................................

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5
 


சேக்கனா M. நிஜாம்

1 comment:

  1. அம்மாவின் இலவசம் ! இலவசம் ! இலவசம் ...

    தமிழக முதல்வர் மடி கணினி இலவசம் மிக்ஸி இலவசம், கிரேண்டர்,இலவசம் கேபில் டிவி இலவசம் என்று இலவசங்களை வாரி, வாரி வழங்க்கும்போது யாரும் சரியாக யோசிக்க வில்லை அவர்கள் தந்த அனைத்து இலவசங்களும் மின்சாரம் இல்லாமல் எதுவுமே செயல்படாத இலவசங்கள் மக்கள் யாரும் அப்போது யோசிக்கவில்லை அதன் விலைவு இப்போது தான் மக்களுக்கு புரியவந்துள்ளது இலவசங்களை கொடுத்து மின்சாரத்தில் எல்ல கட்டணத்தையும் வசூல் செய்ய தீர்மானித்து விட்டார் அம்மாவின் முளையே முளை தான் எனவே இந்த மின்கட்டண உயர்வு பற்றி அச்சம் கொள்ள தேவை இல்லை இதனை ஏழை பனக்காரன் என்ற பாகு பாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் பயன் படுத்துவார்கள், எனவே அம்மா போட்ட கணக்கு எல்லாம் சரி தான் கஜானவில் எடுத்த பணத்தை திரும்ம கஜனவுகே வாங்கி கொள்ளகிறார். நம்முடைய சிரமங்களை போக்கும் வகையில் அம்மா இன்னொரு நல்ல யோசனையும் உள்ளதாம் 23 மணி நேரமும் மின்வெட்டை அமல் படுத்தினால் நமக்கும் நல்லது தான் வேதாலம் மீண்டும் முருகை மரத்தில் ஏரிய கதையை போல் நாமும் நமது வீடுகளில் அரிகன் விளக்கை ரெடி செய்து வைத்து கொள்வதுதான் நல்லது

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.