அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
நேற்றைய தினம் 30.03.2012 அதிரை தந்த கணிணித் தமிழுருத் தந்தையுடன் சிறுபொழுதை மம்ஸர் பூங்காவில் கழித்துவிட்டு வந்த எமக்கு நினைவுகளில் பல்லாண்டுகள் வந்து சென்றன அசைவுகளாய்.
குர்ஆன் யாருக்கு? என்று மேடையிட்டதும், தன் இளவலின் திருமணத்திற்கு தடையாய் முளைத்த உள்ளூர் காங்கிரஸ்காரரை வெளியூர் காங்கிரஸ்காரரை வைத்து முள்ளெடுத்த விதம் எல்லாம் பள்ளிகால பரவசம்.
தம்மாம் மாநகரில், அரப் பேங்க் பில்டிங் மாடியில் ஜமீல் காக்கா அவர்கள் தங்கியிருந்த போது, அந்த மர்கஸிற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்பை பெற்றேன். அப்போதெல்லாம் கம்ப்யூட்டரை எட்ட நின்று மருட்சியுடன் பார்த்தபோது அதில் ஜமீல் காக்கா தன் தமிழ் எழுத்துருவை உருவாக்கி கொண்டிருந்ததை பலமுறை பார்த்த நேரடி காட்சிகள் இன்னும் நினைவில் பசுமையாய்.
தம்மாமில் காக்காவின் கைவண்ணத்தில் நம் தமிழை டிஜிட்டல் வடிவில் பார்த்தபோதும், அதன் பின் சமரசம் இதழில் தமிழுருக்களை கண்டறிந்த ஜமீல் காக்காவின் பள்ளி படிப்பு குறித்தும் அறிந்தபோதும் அதிர்ந்தேன் சந்தோஷத்தில்.
நான் துபை வரும் சில தினங்களுக்கு முன்பு, இனி நான் கம்ப்யூட்டருடன் மட்டும் தான் பேசுவேன் (அதிலும் அல்லாஹ் உதவியால் ஜெயித்து காட்டியது வேறு விஷயம்) என அதிரை இஸ்லாமிக் மிஷனிடமிருந்து தன்னை தூரப்படுத்திக் கொண்ட காக்கா அவர்களை நிர்வாகிகளுடன் நேரில் ஷார்ஜா சென்று சந்தித்து தோல்வியுடன் திரும்பியபோது வெறுப்பின் முதல் வித்து விதைக்கப்பட்டது.
காலப்போக்கில் நாங்கள் இயக்க தக்லீதுகளாய் மாற, எம்மோடு இல்லாதவர்களை எதிரிகளாய் ஜார்ஜ் புஷ் கண்கொண்டு பார்த்தோம் அதில் ஜமீல் காக்காவும் ஒருவராய் போனார்கள். ஒருமுறை எங்களின் இயக்கத் தலைவர் ஒருவர் இந்தியாவிலிருந்து துபை வர. அவரை காண தனிப்பட்ட முறையில் குடும்பத்துடன் துபை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த ஜமீல் காக்கா எங்கள் இயக்கத் தலைவரை சந்தித்து விடக்கூடாது என்று முயன்று தோற்றுப்போனோம் அவ்வளவு வெறுப்பு (அவர்) அருமை தெரியா நம்; மண்ணின் மைந்தனின் மேல்.
ஒருநாள் தன் பேரனுடன் ஷார்ஜாவிலிருந்து துபை வந்திருந்த ஜமீல் காக்காவின் தோற்றத்தை பார்த்ததும் பதறிவிட்டேன் உள்ளூர, முழுக்க நரையுடன். கருமை நிற முடியுடன் கடைசியாக பார்த்தவனுக்கு அவர் நரை நான் சந்திக்காமல் இழந்துவிட்ட வருடங்களைச் சொன்னது. என் உடன்பிறப்பு அப்துல் நாசர் அவர்களை நேசித்த ஒரு மனிதரை நான் நேசிக்கத் தவறியது என் கைசேதமே.
காலங்களை சூழலச் செய்யும் அல்லாஹ் நாடினான், இயக்கங்களுக்கு முழுக்குப் போட்டோம். இனங்கண்டு கொண்டோம் இனியவர்களை. இணைந்தோம் உள்ளத்தில் கசடுகள் ஏதுமின்றி, இன்ஷா அல்லாஹ் இனி தொடர்வோம் ஒப்பற்ற ஓரிறை வழியில்.
சரி, மீண்டும் மம்ஸருக்கு வருகிறேன்
நம் கணிணித் தமிழரை இன்னும் அதிகம் பேசவிட்டு கேட்டிருக்க வேண்டும்.
இனி அதிரையில் இருக்கப்போகும் ஜமீல் காக்காவுடன் எவ்வாறு நாம் இணைந்து மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பங்காற்ற முடியும் என ஆலோசித்திருக்க வேண்டும். ஜமீல் காக்கா அவர்களுக்கு அறிமுகமாவர்களுடன் நம்மை நாமும் அறிமுகம் செய்திட வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட வாய்ப்பு இன்னும் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். இரைச்சல் மிகுந்த பூங்கா தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் மேலும் இது ஓர் அரங்க நிகழ்வாக நடந்திருக்க வேண்டும். பிரிவுபசார விழா தோற்றம் தவிர்க்கப்பட்டு ஓர் புரிந்துணர்வு நிகழ்வாக நடந்திருந்தால் இன்னும் சந்தோஷமே.
அல்ஹம்துலில்லாஹ், முடிந்ததை ஓர் பாடமாக கொள்வோம். எதிர்கால நிகழ்வுகள் நம் அதிரை சாதனையாளர்களை அடையாளம் காட்டிடும் வகையில் அமைந்திட வாழ்த்தி விடைபெறுகிறேன்.
தமிழின் 247 எழுத்துக்களையும் என் இருவிரல்களுக்குள் திணித்த தழிழுருவின் தந்தைக்கும், ஊக்கமளித்து தமிழ் தட்டச்சை எனக்கு நிஜமாக்கிய சகோதரர் தாஹா (அப்பியான் யூசுப் அவர்கள் மருமகன்) அவர்களுக்கும் நன்றி.
நினைவும் நிழலும்
அதிரைஅமீன்
பேட்டி அளித்திருப்பவர் எழுதியிருப்பதோ இயக்கங்களிலிருந்து விடுபட்டதாக. ஆனால் இருப்பதோ பாக்கர் ட்ரஸ்டில் முக்கியப் பொறுப்பதில்.துபையில் நடக்கும் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதோ யாருடைய கூட்டத்திற்கு என்றால் ஜாக்ஸின் துணைத் தலைவர் கோவை அய்யூப் அவர்களின் பேச்சிற்கு. சொல்லிக் கொள்வதோ இயக்கங்கலிலிருந்து விடுபட்டு விட்டதாக ஒன்றும் புரியவில்லை. விளங்கவில்லை
ReplyDeleteபேட்டி அளித்திருப்பவர் எழுதியிருப்பதோ இயக்கங்களிலிருந்து விடுபட்டதாக. ஆனால் இருப்பதோ பாக்கர் ட்ரஸ்டில் முக்கியப் பொறுப்பதில்.துபையில் நடக்கும் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதோ யாருடைய கூட்டத்திற்கு என்றால் ஜாக்ஸின் துணைத் தலைவர் கோவை அய்யூப் அவர்களின் பேச்சிற்கு. சொல்லிக் கொள்வதோ இயக்கங்கலிலிருந்து விடுபட்டு விட்டதாக ஒன்றும் புரியவில்லை. விளங்கவில்லை
ReplyDeleteபேட்டி அளித்திருப்பவர் எழுதியிருப்பதோ இயக்கங்களிலிருந்து விடுபட்டதாக. ஆனால் இருப்பதோ பாக்கர் ட்ரஸ்டில் முக்கியப் பொறுப்பதில்.துபையில் நடக்கும் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதோ யாருடைய கூட்டத்திற்கு என்றால் ஜாக்ஸின் துணைத் தலைவர் கோவை அய்யூப் அவர்களின் பேச்சிற்கு. சொல்லிக் கொள்வதோ இயக்கங்கலிலிருந்து விடுபட்டு விட்டதாக ஒன்றும் புரியவில்லை. விளங்கவில்லை
ReplyDelete