குவைத் சிட்டி : ட்விட்டர் என்று சொல்லப்படும் பிரபல சமூக வலைத்தளத்தில் முஸ்லீம்களால் இறை தூதர் என்று சொல்லப்படும் முகமது நபியை குறித்து அவதூறாக எழுதியதால் குவைத் நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இது குறித்து குவைத் அரசால் நடத்தப்படும் குனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள அந்நபர் இஸ்லாமிய கொள்கைகளை கிண்டல் அடித்ததாகவும் முகமது நபி மற்றும் அவரது தோழர்களை குறித்து அவதூறாகவும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் எழுதியுள்ளதாக கூறியுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்நபரோ தான் அவ்வாறு எழுதவில்லை என்றும் தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ கைப்பற்றி எழுதியிருக்க வேண்டும் என்றும் கூறினார். குவைத்தில் அரசியல் வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலராலும் பயன்படுத்தப்படும் பிரபல சமூக வலைத்தளமாக ட்விட்டர் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : www.inneram.com
No comments:
Post a Comment