Latest News

வாகன விபத்தைக் கண்டுபிடிக்க நவீன கெமரா


வாகன விபத்தைக் கண்டுபிடிக்க நவீன கெமரா : மதுரை மாணவர் கண்டுபிடிப்பு


வாகன விபத்துக்களைத் தடுக்க நவீன ஒளிப்பதிவுக் கெமராவை மதுரையைச் சேர்ந்த பொறியியல்துறை மாணவர் கண்டுபிடித்துள்ளார். மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரது புதல்வரான நாகராஜ் என்பவரே இதனைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.பிடிஆர் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் பிரிவில் இவர் இறுதியாண்டு படித்து வருகிறார். இறுதியாண்டில் மாணவர்கள், தங்கள் துறையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பிரத்தியேக சொப்ட்வெயார் துணையுடன் வாகன விபத்துக்களைத் தடுக்கும் கருவியை நாகராஜ் கண்டு பிடித்துள்ளார்.

"கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது. எனவே, வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் விபத்தைத் தடுக்கும் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்து ஆராய்ந்தேன். அதன் விளைவாக இறுதியாண்டில் இக்கருவியைக் கண்டறிந்தேன்" என்கிறார் நாகராஜ்.

"காரின் இருபக்க கண்ணாடியிலும் ஸூம் லென்சுடன் கூடிய நவீன கெமரா பொருத்தப்பட்டு, காரின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். அதை காருக்குள் உள்ள எல்இடி டிஸ்ப்ளேயில் பார்த்துக் கொண்டே காரை ஓட்டலாம். இதனால் சிறந்த முறையில் காரை விபத்தில்லாமல் பாதுகாப்பாக ஓட்ட முடியும். மேலும், இதில் உள்ள பிரத்தியேக சொப்ட்வெயார் துணையுடன் தொடர்ந்து 60 நாட்கள் நிகழ்வுகளையும் பதிவு செய்து கொள்ளலாம்.

விபத்தைத் தடுக்க மட்டுமன்றி, கொலை மற்றும் கொலை முயற்சி நடந்த பிறகு அந்த நிகழ்வுகளையும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென தனி பாஸ்வேர்ட் இருப்பதால் காரின் உரிமையாளர் தவிர மற்றவர்கள் இதனை அறிய முடியாது. அறுபது நாட்களுக்கு பிறகு பென் டிரைவிலோ அல்லது சி.டி.யிலோ அந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய பிரமுகர்கள், காவல்துறை உட்பட அனைவருக்கும் இந்தக் கருவி பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் கடினமாக உழைத்து, 45 ஆயிரம் ரூபா செலவில் இந்தக் கருவியை கண்டுபிடித்துள்ளேன். விரைவில் இக்கருவிக்கான காப்புரிமை பெற இருக்கிறேன்" என்று மேலும் விளக்கம் தருகிறார் அவர்.

2 comments:

  1. முகமது மாலிக்January 23, 2012 at 8:40 PM

    சகோதரர் நாகராஜ் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கருத்துக்கள் பதியும் பகுதியை திறந்து வைத்த நிர்வாகத்திற்கு ( TIYA ) என் வாழ்த்துக்கள் !

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.