

நமதூரைச் சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நமதூரைச் சேர்ந்த என்னற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவர்களும் வரலாற்றில் பதியப்பட வேண்டும் ( இன்ஷா அல்லாஹ் ! )
இந்தியா குடியரசுப் பெற்று 63 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம்.
மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.
இறைவன் நாடினால் ! தொடரும்.....................
நமதூரில் இத்தனை தியாகிகள் உண்டு என்பதை நினைக்கும் போது மனதிர்க்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது இத்தனை தியாகிகள் அதிரையில் என்பதை நினைக்கும் போது மனதுக்கு சந்தோசம்தான் அதே நேரம் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்து விட்டன இத்தனை காலம் நம் கூடவே அதுவும் நமது தெருவிலேயே ஒன்றாக இருந்துள்ளோம் இந்த தியாகிகளை பற்றி நாம் அறியவே இல்லை இவர்களுக்கு நாம் ஒரு பாராட்டுகளை கூட தெரிவிக்க வில்லையே என்று நினைக்கும் போது மனதுகு வருத்தம் தான் என்றாலும் இந்த தியாகிகள் கூட நாமும் சேர்ந்து இருந்துள்ளோம் என்பதை நினைத்து சந்தோசப்படுகிறேன். இன்னும் ஆலமாக சென்றால் நிறையா பேர் கிடைக்குமென்று நான் நினைக்கிறேன் அதிலும் மேலத்தெருவிலேயே இத்தனை தியாகிகள் உண்டு என்பதை நினைத்து நான் ரொம்ப சந்தோசமடைகிறேன், மின்னார் வீட்டில் இரண்டு தியாகிகள் உண்டே இது போன்று இன்னும் நமதூரில் எத்தனை தியாகிகள் உள்ளனர் என்பதையும் தம்பி நிஜாம் எல்லோருக்கும் எடுத்து சொன்னால் ரொம்ப நன்றாக இருக்குமென்று நான் நினைக்கிறேன் இது போன்று நமது தெருவிலும் நமதூரிலு மரைந்து கிடக்கும் செய்திகளை தங்கள் எழுத்தாற்றல் மூலம் வெளியில் கொண்டு வரவும் தங்களின் அடுத்த கட்டுரையை எதிர் நோகியிருக்கும்.
ReplyDelete