நெஞ்சங்களை உலுக்கிய பாக்கிஸ்தானை சேர்ந்த உலகின் மிக இளவயது Microsoft certified professional அர்பா கரீமின் மரணம்
பாக்கிஸ்தான், பைசலாபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட அர்பா கரீம் நெற்று வபாத்தானது முஸ்லிம் நெஞ்சங்களை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1995இல் பிறந்த (16 வயது) அர்பா கரீம் உலகில் மிக சிறிய வயதில் Microsoft certified professional (2004 - 2008)பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2005 ம் ஆண்டு விஞ்ஞானத்திற்கும் தொழில்நுட்பத்திற்குமான Fatimah Jinnah Gold Medalஐ பாக்கிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து பெற்றார்.
சென்ற வருடம் 16 வயதாக இருக்கும் போது லாகூர் இல் உயர்த்தர படிப்பை மேற்கொண்டிருந்த வேளையில் அவருக்கு ஏற்பட்ட வலிப்பு நோயும் அதனை தொடர்ந்து வந்த Cardiac arrest எனப்படும் இதய நோயும் அவரை தாக்க அவர் அதற்கான சிகிச்சைகளை லாகூர் இராணுவ வைத்தியசாலையில் மேற்கொண்டு வந்தார்
இவரின் சுகயீனம் பற்றி அறிந்தMicrosoft நிறுவனத்தின் தலைவர் Bill Gates அர்பாவின் பெற்றோரை சந்தித்து.அவரின் சிகிச்சைக்கான முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டதோடு, அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்குவதற்கும் முன்வந்தார்.
இருப்பினும் 2 நாட்களுக்கு முன் மூளையின் சில பாகங்கள் செயலிழந்ததால் கடும் சுகயீனத்துக்கு ஆளானார்.அதனை தொடர்ந்து நேற்று இரவு எந்தவித சிகிச்சையும் பலனளிக்காது லாகூர் வைத்தியசாலையில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
அர்பா கரீமின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு மட்டுமன்றி தகவல் எதிர்கால தொழில்நுட்பத்துறைக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும்
No comments:
Post a Comment