நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி ( GUIDELINE VALUES ) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.
தமிழ் நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து புதிய பட்டியல் தயாரித்துள்ளனர்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்.
தெரு | ரூ. |
ஆலடித் தெரு | 250 |
பிலால் நகர் | 150 |
ஆறுமுக கிட்டங்கி தெரு | 150 |
ஆதம் நகர் (M.S.M NAGAR மற்றும் K.S.A LANE) | 100 |
செட்டித்தெரு | 500 |
ஹாஸ்பிட்டல் ரோடு | 500 |
காட்டுபள்ளிவாசல் தெரு | 250 |
வெற்றிலைக்காரத் தெரு | 200 |
சின்ன நெசவுக்காரத் தெரு | 250 |
ஹாஜா நகர் | 150 |
கடற்கரைத் தெரு | 250 |
தரகர் தெரு | 300 |
பாத்திமா நகர் | 100 |
காலியார் தெரு | 150 |
மேலத்தெரு | 200 |
மேலத்தெரு (சவுக்கு கொல்லை) | 250 |
பெரிய நெசவுக்காரத் தெரு | 250 |
நடுத்தெரு | 300 |
செக்கடி தெரு | 250 |
சேது ரோடு | 400 |
தட்டாரத் தெரு | 300 |
வண்டிப்பேட்டை | 200 |
புதுத் தெரு | 300 |
புதுமனைத் தெரு | 500 |
புதுக்குடி நெசவுக்காரத் தெரு | 100 |
கீழத் தெரு | 200 |
சால்ட் லேன் | 200 |
மேற்கண்ட பட்டியலை பார்த்து மக்கள் சொல்லும் கருத்தையும் கேட்டு பத்திரப்பதிவு அதிகாரிகள் அதை அரசிடம் தெரிவித்து அரசின் ஒப்புதல் பெற்று இறுதி கட்டணம் நிர்னையிப்பார்கள். ஆகையால் நமது சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தங்களின் கோரிக்கையை தங்களால் இயன்றளவு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும்படி அனைத்து சகோதரர்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மின்னஞ்சல் முகவரிகள் :-
E-mail : digrthanjavur@tnreginet.net
E-mail : dropattukkottai@tnreginet.net
E-mail : sroadhiramapattinam@tnreginet.net
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
No comments:
Post a Comment