புதுதில்லி,டிச.1: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடங்களிலேயே முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பகிர்ந்து அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்தார். வெகு 27 விரைவிலேயே இந்த உள் ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டுவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் வியாழக்கிழமை பேசுகையில் இதை அவர் தெரிவித்தார். சதவீதத்தில்: "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது 27% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பிற்பட்ட நிலைமையைக் கருதி அவர்களுக்கும் இதிலேயே உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. முஸ்லிம்களுக்கு இந்த 27 சதவீதத்தில் எத்தனை சதவீதம் உள் ஒதுக்கீடு தருவது என்பது குறித்துத்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. மத்திய அமைச்சரவை வெகு விரைவிலேயே இது தொடர்பான முடிவை எடுத்துவிடும். எப்போது என்று இப்போது தெரிவிக்க முடியாது. இரண்டரை ஆண்டுகள்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினோம், இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் எவ்வளவு என்று பரிசீலிக்க வேண்டிய நேரம் இது. இனி எஞ்சியுள்ளவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று வாதிட்டாலும் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்டவர்களாக அவர்களைக் கருதி இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை. இட ஒதுக்கீடு என்பது சாதீய அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக என்பதை ஏற்றுக்கொண்டாலும், முஸ்லிம்களின் நிலைமையை சச்சார் கமிட்டி போன்ற உயர் அமைப்புகளும் ஆராய்ந்து அவர்களுக்கென்று தனி திட்டங்கள் தேவை என்று அறிவித்துள்ள நிலையில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. தென் மாநிலங்களில்: ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிலேயே முஸ்லிம்களுக்கும் தனி ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனவே அது எப்படி அமலாகிறது என்றும் ஆராய்ந்து வருகிறோம். அந்த அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீட்டை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். முஸ்லிம்களுக்கென்று ஏற்கெனவே ஒருவித இட ஒதுக்கீடு அமலில் இருந்தாலும் அது வலுவானதாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.முஸ்லிம்களுக்குள் சாதிகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுடைய பின் தங்கிய நிலைமையைக் கருத்தில்கொண்டே |
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !