சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவை எதிர்த்து இன்று இந்தியா முழுவதும் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவால் சில்லறை வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள் என்று கூறி தமிழகத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்தில் ஹோட்டல்களைத் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப் பட்டுள்ளன.
வணிகர்களின் கடையடைப்புப் போராட்டத்துக்கு மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வருகின்றன.

No comments:
Post a Comment