Latest News

தின மலம் தீக்குளித்து தற்கொலை !


தினமலர் சென்னை தொடர்பு எண்கள். அனைவரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.


மெயில் ஐடி coordinator@dinamalar.in

Mobile No: - 9944309600

Ph: 044 2841 3553 , 2855 5783
044-24614086


உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள் !




உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய் & பிராடு) பத்திரிக்கையான தினமலர் உண்(பொய்)மையின் உரைகல்லைக் கொண்டு பயங்கரமாக உரசியதால் பத்திரிக்கை தர்மம், நேர்மை போன்றவைகள் ஏற்கனவே அரைகுறையாக எரிந்து அழுகி நாறி போயிருந்த நிலையில் நாற்றம் அதிகமாகவே தன்னை முழுமையாக எரித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இப்போது இருப்பது வெறும் பிணம் மட்டும் தான்.

மறுபடியும் இந்த தினமலர் என்ற தினபிணம் தனது நரித்தனத்தை காட்டியிருக்கிறது. எத்தனை முறை அம்பலப்பட்டாலும் இன்னும் நம்மை நம்பக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் தினமலருக்கே உரித்தான மட்டரகமான பணியில் 07/12/11 வியாழன் இன்று

“தீ மிதித்து மொகரம் அனுசரிப்பு இந்துக்களும் பங்கேற்றதால் ஒற்றுமை”
என்ற வழக்கமான போஸ்ட் தந்திர உத்தியோடு ஒரு செய்தி. தலைப்பை பாருங்க என்ன ஒரு நரித்தனம் (செய்தி தலைப்பு போடுவதற்காகவே தனியாக ஸ்பெஷல் வகுப்பு எடுப்பார்கள் போல).இந்த செய்தியின் தலைப்பை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது சமய நல்லிணக்க செய்தி போன்று தெரியும் (அதுதான் தினமலரின் ஸ்பெஷாலிட்டி) ஆனால் செய்தியை ஊன்றி படித்தால் தினமலரின் அக்மார்க் சானக்கியத்தனம் புரியும்.

மொகரம் பண்டிகையின் போது, முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.ராயபுரத்தில் உள்ளது மஜித்த பர்குண்டா பள்ளி வாசல். இங்கு மொகரம் பண்டிகையை ஒட்டி அசேன் உசேன் தீமிதி திருவிழா நடைபெறும். பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்டோர் முறைப்படி விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்த தீ மிதித்தனர். இதில் 15 பேர் இந்துக்கள்.மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதி நிகழ்ச்சி நடத்துவதற்கான குழியை வெட்டுகின்றனர். ஐந்து நாள் வரை குழியைக் காய வைக்கின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவுக்குப்பின் அதிகாலை 3 மணிக்கு தீ மிதி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் 10ம் நாள் மொகரம் பண்டிகை. அன்று தீ மிதிக்கும் குழியை மூடி நிகழ்ச்சி நிறைவு செய்கின்றனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீபா கூறும் போது, ""தீமிதிக்கும் நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் கலந்து கொள்கிறேன். இந்துக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்,'' என்றார்.மண்ணடி, ஐஸ்ஹவுஸ், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளி வாசல்கள் முன்பும் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செய்தியில் இந்துக்கள் கலந்து கொண்டதால் ஒற்றுமை என்று எழுதியிருக்கும் தலைப்பிற்குள்ளே கலந்து கொள்ளவில்லையென்றால் ஒற்றுமை கிடையாதா ? என்ற எதிர் கேள்வி இயல்பாக வரும். ஒற்றுமையை ஏற்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்க பண்டிகையில் கலந்துக் கொள்வது தான் ஒற்றுமை என்பது போல் உளறிக் கொட்டியிருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார் என்று அசிங்கமாக வரலாற்றை திரித்து, முஸ்லிம்களின் உயிருக்கு மேல் மதிக்கக்கூடிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற அவதூறை கை கூசாமல் எழுதுகிறது எவ்வளவு பெரிய அபாண்டம்.

தற்கொலை எந்த சூழலிலும் எந்த காரணத்திற்காகவும் செய்யக் கூடாது. வாழ்க்கையில் எதிர்த்து போராடியே ஆக வேண்டும் என்று போதித்த தலைவரின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று புளுகியிருப்பது எதார்த்தமானது அல்ல.

வரலாற்று உண்மை என்ன ?
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாசத்துக்குரிய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த ஆறு மாதத்திற்கு பிறகு இயற்கையான முறையில் இறந்தார்கள்.அப்போது அவரது மகன்கள் ஹசன் (ரலி),ஹுசைன் (ரலி) இருவரும் சிறுவர்கள் (புகாரி 3903)

ஹிஜ்ரி வருடம் 11ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3ம் நாள் செவ்வாய் இரவு பாத்திமா (ரலி) மரணித்தார்கள்(நூல்:அல் இஸாபா 11583)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அலீ (ரலி), ஃபழ்ல் (ரலி) ஆகியோர் கப்ரில் இறங்கி இரவில் அடக்கம் செய்தனர். (அல் இஸாபா 11583 பாகம் 2, பக்கம் 128)பாத்திமா (ரலி) இறந்தது ஹிஜ்ரி 11ல் அவரது மகன் ஹுசைன் (ரலி) போரில் கொல்லப்பட்டது ஹிஜ்ரி 61-ல். கிட்டதட்ட 50 வருட இடைவெளி. கவனிக்கவும் இதுதான் தினமலர் செய்தி தரும் இலட்சணம்.

தற்கொலை செய்யக் கூடாது என்பதற்கான இஸ்லாமிய சட்டங்கள்.

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்(குர்ஆன்2:195)உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் (குர்ஆன்4:29)


தினமலரின் மேல் ஆரம்ப காலகட்டங்களில் (1999 களில்) நல்ல அபிப்ராயம் இருந்தது. அறியாமல் எழுதுகிறார்கள் என்று நினைத்து அப்போது பெரிதாக இணையதள வசதியில்லாத காலம் என்பதால் பிளாக்கில் பின்னூட்டம் (கருத்துரை) எழுவதற்கு முன்பே சரியான நிலைப்பாடை விளக்கி வாசகர் கடிதங்கள் எழுதியிருக்கேன். அவர்கள் ஒன்றை கூட பிரசுரித்தது கிடையாது.

இது உங்கள் இடம் என்கிற பகுதியில் இஸ்லாத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வருகிற கற்பனை கதை பாணியிலான கடிதங்கள் வெளியாவதை பார்த்து தெளிவடைந்தேன். உதாரணத்திற்கு தாலி கட்டும் பழக்கம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இது உங்கள் இடம் என்கிற இடத்தில் வருகிற பதிலை பாருங்கள்.

முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து ஆட்சி செய்த போது கடைத்தெருவுக்கு வந்து திருமணம் முடிக்காத இந்து பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். தவறுதலாக திருமணமான பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடக்கூடாது என்பதற்காக தாலிக் கயிறு அடையாளமும் கட்டும் பழக்கமும் ஏற்பட்டது என்று ஒரு வாசகர்!? எழுதுகிறார். இது அந்த பகுதியில் வரவேற்பை பெறுகிறது. இந்த செய்தியை படிக்கிற சகோதர இந்துக்கள் தங்கள் மனைவியின் தாலியை பார்த்தால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அடியாளத்தில் ஏற்பட வேண்டும் என்கிற தந்திரத்தை புரிந்துக் கொண்டேன்.

அடுத்து ஒரு செய்தி. அப்போது பயர் என்கிற ஓர் பாலின உறவு கொள்கிற இளம் விதவைகளின் கதையை மையமாக கொண்ட படம் நந்திதாஸ் என்கிற நடிகை மேட்டுக்குடி உயர்ஜாதி பெண்ணாக நடித்து சர்ச்சைக்குள்ளான நேரம். இது உங்கள் இடத்தில் ஒரு வாசகர்!? கேள்வி கேட்கிறார். அதற்கு பதில்
முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது அந்த இஸ்லாமிய பெண்களிடம் அந்த பழக்கம் இருந்தது. அப்படியே அந்த பழக்கம் இந்துப் பெண்களை தொற்றிக் கொண்டது என்று அதே முகலாய கதையை கைக்கூசாமல் வாசகர் என்ற பெயரில் விஷத்தை விதைத்தார்கள்.

அதற்கு கருத்தியல்ரீதியாக பதில் எழுதினேன். இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மறுமணம் செய்து வைத்து விடுவார்கள். மறுமணம் செய்து வைக்க மறுக்கிற சமூகத்தில் தான் லெஸ்பியன் / ஓர் பாலின உறவு தேவைப்படும் என்கிற ரீதியில் நான் எழுதிய வாசகர் கடிதங்கள் எந்த குப்பையில் கிடக்கிறதோ ? தெரியவில்லை.

தினமலர் இலவச இணைப்பு சிறுவர் மலரில் குருபக்தி என்ற என்ற பட சிறுகதையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கற்பனையான உருவப்படம் வரைந்து நபித் தோழரான அபுபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்கள் காலில் விழுந்து வணங்குவது போல் வரைந்திருந்தது.நபியவர்கள் நடந்து வரும்போது மரியாதைக்காக எழுந்த நபித் தோழரின் தோளைப் பிடித்து அமுக்கி அமர சொன்னார்கள் நபிகளார். அவர்கள் காலில் விழுவதை அனுமதிப்பார்களா? காலில் விழுவதை இஸ்லாம் தடை செய்த விஷயமும் முஹம்மது நபிக்கு உருவம் வரையக்கூடாது என்கிற விஷயமும் தனக்கு தெரியாது என்று சமாளித்தது.தினமலர் அளித்த விளக்கம் முழுப்பொய் என்பதை நிருபிக்கும் விதமாக டென்மார்க்கில் வெளியாகி பல கலவரங்களையும் உயிர் பலியும் ஏற்படுத்திய முஹம்மது நபி உருவப்பட கார்டூனை தமிழ் பத்திரிக்கையில் அதுவும் ரமளான் மாதத்தில் வெளியிட்டு தன் உண்மை முகத்தை காட்டியது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமல்ல இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூக மக்களை பற்றியும் இதே பாணியிலான செய்திகளை வெளியிடுவது அனைவரும் அறிந்த உண்மை.

நியாய உணர்வுள்ள நடுநிலைவாதிகளும், சிறுபான்மை இன மக்களும் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மற்றும் தமிழினவாதிகளும் தினமலரை அம்பலப்படுத்தி புறக்கனிக்க வேண்டும்.


நன்றி : சகோ. ஹைதர் அலி – ரியாத்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.