Latest News

கொல்கத்தா ஆஸ்பத்திரி தீ விபத்தில் 90 பேர் பலி: 9 நோயாளிகளை உயிருடன் மீட்ட கேரள நர்சுகள்

கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ. (அம்ரி) தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. ஆஸ் பத்திரியில் 169 நோயாளி களும், அவர்களது உறவினர்களும் தங்கி இருந்தனர். இரவுப் பணியில் டாக்டர்கள், நர்சுகள் ஊழியர்கள் இருந்தனர். அதிகாலையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

தப்பிக்க முடியாமல் 85 நோயாளிகளும், 4 ஆஸ்பத்திரி ஊழியர்களும் கருகி பலியானார்கள். தீ விபத்து நடந்த ஏ.எம்.ஆர்.ஐ. ஆஸ்பத்திரி சூப்பர் ஸ்பெசாலிட்டி வசதி கொண்டது. ஆஸ்பத்திரி வார்டுகள் அறைகள் அனைத்தும் குளு குளு (ஏ.சி.) வசதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தீ விபத்து போன்ற நேரங்களில் தப்பிக்க அவசர வழி செய்யப்படவில்லை. இதனால் தீப்பிடித்ததும் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. ஜன்னல் கண்ணாடியை உடைத்துதான் வெளியேற முடிந்தது. ஆனால் நோயாளிகள் உடல்நலக்குறைவால் இருந்ததால் அவர்களால் வேகமாக வெளியேற முடியவில்லை.

அவசர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் இருந்த நோயாளிகளும் தவித்தனர். தீப்பிடித்ததும் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வழி தெரியாத அளவுக்கு எங்கும் இருள் சூழ்ந்தது. ஒவ்வொரு மாடியாக தீ பரவியது. தரைத் தளத்திலும் முதல் மாடியிலும் வெளியே வர முடியாத அளவுக்கு தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு படையினர் தாதமாக வந்ததால் 5 மணி நேரத்துக்கு பிறகே தீயை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் புகை மண்டலம் 7 மாடியிலும் புகுந்தது. தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்திய பின்புதான் மாடியில் உள்ள அறைகளுக்கு செல்ல முடிந்தது.

அதே நேரத்தில் “ஹை டிராலிக்” ஏணி மூலம் தீயணைப்பு படையினர் மேல் மாடிக்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நோயாளிகளை ஒவ்வொருவராக கயிறு கட்டி கீழே இறக்கினார்கள். முதல் மாடியிலும் தரைத் தளத்தில் இருந்த நோயாளிகளும் தீயில் கருகி இறந்த னர். மற்ற மாடிகளில் இருந்த நோயாளிகள் புகை மண்டலத்தில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்கள். சம்பவ இடத்தை முதல்- மந்திரி மம்தா பானர்ஜி பார்வையிட்டபோது சாவு எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது.

ஆனால் தீயணைப்பு படையினர் தீயை அணைத்த பின் ஒவ்வொரு வார்டாக சென்றபோதுதான் அங்கு மூச்சுத் திணறி பலர் இறந்து கிடந்தனர். தீயில் கருகி இறந்தவர்களை விட மூச்சுத் திணறல் மற்றும் மின்சாரம் துண்டிப்பால் உயிர் காக்கும் கருவிகள் செயல்படாததால் பலியானவர்கள்தான் அதிகம். இதனால் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. 85-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது. தீ விபத்து நடந்த ஏ.எம்.ஆர்.ஐ. ஆஸ்பத்திரியில் கேரளாவைச் சேர்ந்த நர்சு கள் பணிபுரிந்து வந்த னர். தீ விபத்து நடந்தபோது அவர்களில் 2 பேர் பணியில் இருந்தனர். அவர்கள் தீப்பிடித்ததம் உயிரை துச்சமென மதித்து 9 நோயாளிகளை காப்பாற்றி னார்கள். இதே போல் மீட்பு பணியில் ஈடுபட்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள், நர்சுகள், தீயணைப்பு வீரர் என 4 பேர் மூச்சு திணறி இறந்தனர். ஆஸ்பத்திரியில் போதிய தீ தடுப்பு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்படவில்லை.

இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மருத்துவமனை இயக்குனர்கள் ஆர்.எஸ். கோயங்கா, எஸ்.கே.டோடி, ரவி கோயங்கா, மனிஷ் கோயங்கா, பிரஷாந்தா கோயங்கா, தயானந்த அகர்வால் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.