சிரியாவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரபு கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கிளர்ச்சி நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது.
சிரியா அரசை கவிழ்க்கும் திட்டத்துடன் தான் ஆயுதம் தாங்கிய கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியாளர் குற்றம் சாட்டியுள்ளனர். கலவரம் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது. ஆனால், வலது சாரி குழுக்கள் சாவு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்கிறது.
சிரியாவில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், விரைந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா. சபையை ரஷ்யா வலியுறுத்தியது. ஆனால் இதில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்று ரஷியா கவலை தெரிவித்துள்ளது.சிரியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக தாய்நாடு திரும்புமாறு, அமெரிக்கா அரசாங்கம் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்கர்கள் சிரியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சிரியாவில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சிரியாவில் நடக்கும் சம்பவங்களின் முழுமையான அம்சங்கள் வெளியுலகுக்கு தெரியவில்லை. இதற்கிடையே, சிரியாவில் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரபு கூட்டமைப்பு (லீக்) ஈடுபட்டுள்ளது. அங்குள்ள நிலமையை ஆராயவும், போராட்ட குழுக்கள், ஆட்சியாளர்கள் இடையே சமரசம் செய்து வைக்கவும் அரபு கூட்டமைப்பு ஒரு குழுவை சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த தகவலை சிரியா அரசும் உறுதிப்படுத்தி உள்ளது. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் தாக்குதல்களை நிறுத்து மாறும் வீதிகளில் நிறுத்தப் பட்டுள்ள படைகளை வாபஸ் பெறுமாரும் கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்யுமாறும் இரு தரப்பையும் அரபு கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment