Latest News

அதிரையில் – சமையல் GAS தட்டுப்பாடு !




முந்தையக் காலக்கட்டங்களில் நமதூரில் சமையலுக்காக பயன்படுத்தி வந்த விறகுகள் ( அதிரையிலிருந்து அருகில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு சென்று விறகு வெட்டி வந்து சமைப்பார்களாம் இவ்வாறு எனது சிறுவயதில் என்னுடைய உம்மம்மா மற்றும் வாப்புச்சி சொல்லக்கேட்டுள்ளேன் ), தேங்காய் மட்டைகள், பாலை, பூக்கமலை, கொரங்குமட்டைகள், கொட்டாங்கட்சிகளில் அடுப்பு எரித்து வந்த நமது சமுதாயம் தற்போதுள்ள நவ நாகரிக உலகில்  GAS STOVE  ( 2, 4, 5 PCS BURNER களில் ),  ELECTRIC HOT PLATES,  ELECTRIC INDUCTION COOKER மற்றும் COOKER HOODS போன்ற நவீன சாதனங்களை காலத்திற்கேற்ப மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்த முக்கிய ஆதாரமாக உள்ளது GAS மற்றும் ELECTRIC POWER. நமதூரில் 80 % மக்கள்கள் GAS CONNECTION னைப் அரசு நிறுவனமான INDANE முலமாகப் பெற்றுள்ளார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தங்குதடையின்றி BOOKING செய்த ஒரு வாரக் காலக்கெடுவுகளில் கிடைத்து வந்த சிலிண்டர்கள் தற்போது ஒரு BOOKING க்கு 25 நாட்கள் எடுத்துக்கொண்டு டெலிவரி செய்கிறார்கள் மறு BOOKING செய்ய மறுபடியும் 25 நாட்கள் கழித்துதான் BOOKING ஐ உறுதி செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் இரண்டு மாதங்களாகி விடுகிறது நுகர்வோருக்குப் போய்ச் சேர அதுவும் தற்போது உள்ள மழைக் காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விறகுகளையும் பயன்படுத்த முடியாமல் பொது மக்கள்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இக்குறைகளைப்பற்றி அதிரையில் உள்ள சில பொதுமக்களிடம் கருத்துக்கேட்டபொழுது....

பாதுஷா ( தொழில் அதிபர் ) :-
நான் கடந்த 5-11-2001 அன்று BOOKING செய்தேன் ஆனால் இன்று (30-11-2011 ) வரையில் எனக்கு டெலிவரிச் செய்யவில்லை. நான் போனில் AGENCY ஐ தொடர்பு கொண்டுக்கேட்டபொழுது இன்னும் LOAD வர வில்லை என்கிறார்கள்.

பெயர் சொல்லவிரும்பாத ஒரு ஏழைப் பெண்மணி :-
நான் இலவசமாகக் கிடைத்த கலைஞர் காஸ் இணைப்பை பெற்றுள்ளேன். முதல் புக்கிங் செய்து பெறப்பட்ட சிலிண்டர் கிடைத்தவுடன் மறு சிலிண்டர் கிடைக்க சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் காத்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

அப்துல் காசிம் ( ஆட்டோ டிரைவர் ) :-
‘ நான் ஒரு இணைப்பை வைத்துள்ளேன். இருபது நாட்களுக்குள் காஸ் தீர்ந்து விடுகிறது, மறு சிலிண்டர் கிடைக்கும் வரை விறகு, மட்டைகளை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார் எனது கர்ப்பிணி மனைவி. அவள் புகையீனால் ரொம்ப கஷ்டப்படுகிறாள்.’ என்கிறார்.

கபீரா ( வாடகை வீட்டில் வசிக்கும் பெண் ) :-
எங்கள் வீட்டில் காஸ் இணைப்பு இல்லை.

பஷீர் அகமது ( மளிகை கடை வைத்துருப்பவர் ) :-
நான் புக்கிங் செய்து இருபது நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் AGENCY க்கு போன் செய்து கேட்க்கும்போதும் இன்னும் ஒன்று , இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்பதே பதிலாக உள்ளது.

பெயர் சொல்லவிரும்பாத சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் :-
சிலிண்டர்களை ஆம்னி வேன் , ஆட்டோ ஓட்டும் நபர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று விடுகிறார்கள் என்றும் நுகர்வோர் பயன்படுத்தும் சிலிண்டர்களை COMMERCIAL  பயன்பாட்டிற்க்காக பயன்படுத்துகிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்துகிறார்.

மேற்க்கூறிய மக்களின் குறைகளைப்பற்றி INDANE ஏஜென்சியை தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர்களின் பதில், முன்பு வாரம் ஏழு லோடு ஓசூரிலிருந்து வரும் தற்பொழுது இரண்டு லோடுகளே வருகிறது. அதைப் PRIORITY ப் பிரகாரம் டெலிவரி செய்கிறோம்.  என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் பாதிக்கப்படுவது மக்களாகவே உள்ளார்கள். சம்மந்தபட்ட நிறுவனங்கள் இக்குறைகளைப் போக்கி மக்களின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும்.

மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன்  B.sc.
( 9442038961 )

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.