சேலம் பொதுமக்கள் சர்டிப்பிகேட்
சேலம் நகரிலிருந்து ஜங்சன் செல்லும் சாலையில் உள்ளது தியாகராஜர் பாலிடெக்னிக். சுப்ரமணியாநகர் பகுதியில் கடந்த, 22 ம் தேதி மதியம் 20 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் ஜாலியாக சாலையின் நடுவில் நடந்து போய் கொண்டிருந்தார்.
இரண்டு பக்கமும் விலகி போகும் பொதுமக்கள் சிலர் இந்த காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு சென்றார்கள். சோனா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் உட்பட பெண்கள் பலரும் கண்களை மூடிக்கொண்டனர். யாரை பற்றியும் கவலைபடாமல் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர் கொஞ்சதூரம் போவது பின்னர் அதே வழியில் திரும்பி வருவதுமாக இருந்தார்.
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞர் இருந்த நிர்வாண காட்சியை பார்த்த பலரும் வேடிக்கை பார்த்த்தார்களே தவிர, யாரும் அந்த இளைஞரை பற்றி விசாரிக்கவில்லை. அந்த சாலையில் கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் சிலர் பக்கத்தில் உள்ள சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஸ் பாபுவுக்கு போன் செய்து தகவல் சொல்லியுள்ளார்கள்.
இரண்டே நிமிடத்தின் அங்கு போலீசாரை அனுப்புகிறேன் என்று சொன்னவர் சொன்னபடியே, ஒரு உதவி ஆய்வாளரையும், ஒரு காவலரையும் அனுப்பினார். நிர்வாண இளைஞரை போலீசார் கூப்பிட்டதும் அந்த இளைஞர் மிரட்சியுடன் பயந்து ஓடத்துவங்கினார். பக்கத்தில் இருந்த இளநீர் கடைக்காரர்கள் சிலரும் போலீசாருக்கு உதவிக்கு வர அந்த இளைஞரை துரத்தி பிடித்து விட்டனர்.
உன் பெயர் என்ன...? எந்த ஊர்...? எங்கே போகிறாய்... ? என்று போலீசார் கேட்ட எந்த கேள்விக்கும் அந்த இளைஞரால் பதில் சொல்ல முடியவில்லை. ஏதாவது விடுதியில் கொண்டு போய்விடலாம் என்று போலீசார் முடிவு செய்தபோது, சார் இந்த பையன் இரண்டு மாசம இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கிறான். எங்க கொண்டு போய் விட்டாலும் தப்பி வந்துவிடுவான், ரோட்டுல சுத்தறது மட்டுமே இவனது வேலை, வேறு யாருக்கும் பிரச்சனை செய்ய மாட்டான் என்று அவனை பற்றி தெரிந்த சிலர் போலீசாரிடம் சொன்னார்கள்.
உதவி ஆய்வாளர் தனக்கு கிடைத்த தகவலை ஆய்வாளருக்கு மைக்கில் சொல்ல, அப்படியானால், உடனே ஒரு சட்டையும், டவுசரும் வாங்கி கொடுத்து அனுப்புறேன். நீங்க அதை வாங்கி அந்த பையனுக்கு போட்டு விட்டுட்டு வாங்க என்று சொல்லி மானம் காக்க ஒரு துணி வாங்கி கொடுத்து அனுப்பினார் ஆய்வாளர் சந்தோஸ் பாபு.
உதவி ஆய்வாளரும், ஒரு காவலரும் மனநலம் பாதித்த அந்த இளைஞருக்கு நடு ரோட்டிலேயே நிற்கவைத்து உடுப்பு போட்டு விட்ட காட்சியை நேரில் பார்த்தவர்கள் தமிழ்நாடு போலீசில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று போசிக்கொண்டு, சேலம் போலீசாரை பாராட்டினார்கள்.
நன்றி : நக்கீரன்
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment