அஸ்ஸலாமு அலைக்கும்,
கொட்டும் முடிக்கு
மனம் குட்டுப்பட்டு;
இளித்துப் பேசும்
உறவுகளின் நாவிற்கு
ஒட்டுப் போட்டு;
ஆரோக்கியக் குறைவிற்கு
வளைகுடா நீர் மீதுப்
பழிப்போட்டு;
தப்பித்துக் கொண்டாலும்
தலைமுடி தினந்தோறும்
தரையிற்கு!
கவலைப்பட்டால்
முடி கொட்டும்
கதைகள் மலையேறி;
முடி கொட்டுவதால்
கவலைப்பட்டு
மருந்துக் கடைப் படியேறி!
மருந்துகள் தேய்த்துத் தேய்த்து
விரல்கள் துவண்டுப்போய்;
அரித்தாலும் சொரிய
அச்சம் கொண்டு;
தடவிக்கொடுத்து
முடிக்கு மகுடம் சூட்டி;
காப்பாற்ற எத்தனிக்கும் மனம்;
திருமணம் முடியும் வரையாவது!
--
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
No comments:
Post a Comment