அஸ்ஸலாமு அலைக்கும். இன்று (06-11-2011) ஞாயிற்றுக்கிழமை துபாய் டேரா ஈத்கா மைதானத்தில் அதிரைவாசிகள் 300க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அல்ஹம்துலில்லாஹ்.
காலை 6:50 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்து பராஹா சாலை வாசல் அருகே கூடிய அதிரைவாசிகளை அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை.இன்,அதிரை அனைத்து முஹல்லா,அதிரை ஃபேக்ட் மற்றும் அதிரை நிருபர் இணைய தளங்களின் சார்பில் புகைப்படம் மற்றுக் காணொளிகள் எடுக்கப்பட்டது.
அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஹஜ் பெருநாள் வாழ்த்து அட்டையும் சாக்லெட்டும் இணைக்கப்பட்ட வரவேற்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.சுமார் 350 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டதாக அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் சகோ.சிராஜுதீன் மற்றும் அதிரை நிருபர் சார்பில் சகோ.தாஜுதீன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். இதன் காணொளி மற்றும் புகைப்படங்கள் அதிரையின் பிரபல வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
Thanks to : adiraixpress
No comments:
Post a Comment