Latest News

உங்கள் ஓட்டு யாருக்கு ?


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

உங்கள் ஓட்டு யாருக்கு ?

உங்கள் ஒவ்வொருவருடைய ஓட்டும் உங்களுக்காக உங்கள் குடும்ப நலனுக்காக மட்டும் என்றிருக்கக் கூடாது மாறாக ஊர் நலனுக்காக என்ற எண்ணத்துடன் இருக்கவேண்டும். பேருக்காகவும் புகழுக்காகவும் நிற்பவர்களை தனது குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் புறக்கனித்து விடுங்கள். காரணம் குடும்ப நலனை விட ஊர் நலனே முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சாலைகள் அமைப்பதும் சாக்கடைகள் தோண்டுவதுடன் மட்டும் சேர்மனாக வருபவருடைய பணி முடிவடைந்திடாது மாறாக திடீரென ஏற்படும் இயற்கை சீற்றங்கள்மதக் கலவரங்கள் போன்ற பேராபத்தான காலங்களில் களமிறங்கி நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அரசியல் செல்வாக்கு மிக்கவராக அவர் இருக்க வேண்டும். அரசியல் செல்வாக்கு உள்ளப் பாரம்பரிய குடும்பத்தி லிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே மேற்கூறப்பட்ட நெருக்கடியான நேரத்தில் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகளை சந்தித்து துரிதமாக நடிவடிக்கை எடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

திமுக ஆதரவில் போட்டியிடுபவர் ஆரம்பத்தில் அதிமுகவில் சீட்டுக்கேட்டு கிடைக்காதப் பட்சத்தில் திமுகவில் சீட்டு வாங்கி களம் இறங்கி இருக்;கிறார். இப்பொழுது திமுக தன்னையே காப்பாற்றிக் கொள்;ள முடியாமல் ஆளும் கட்சியியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதால் திடீரென ஏற்படும் நெருக்கடியை ஆளும் கட்சி அதிகாரியை அணுகி அவரால் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியுமா சிந்தித்துக் கொள்ளுங்கள்?  

அதிமுக சார்பில் போட்டியிடுபவரும் ஏற்கனவே வேறொருக் கட்சியில் சீடடுக்கேட்டுக் கிடைக்காமல் போகவே அதிமுவில் சீட்டுப் பெற்று களம் இறங்கியுள்ளார். இப்பொழுதே சீட்டுகாக மாறி மாறி கட்சி தாவிக் கொண்டிருப்பவர்கள் வெற்றிப் பெற்றப் பின் ஊரின் நலனுக்காகப் பாடுப் படுவார்களா சுயநலனுக்காப் பாடுப்படுவார்களா சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அதிமுகவில் எத்தனையோ அரசியல் அனுபவமிக்க முனனோடிகள் இருந்தும் நேற்று முளைத்தவர் பணத்தால் அவர்களை ஓரம் கட்டி விட்டு முன்னிலை வகித்துக் கொண்டார் என்றால் இவர் வெற்றிப் பெற்றப் பின் ஊரின் நலனுக்காகப் பாடுப் படுவாரா ? சுயநலனுக்காப் பாடுப்படுவாரா ? என்பதையும் சிந்தித்துக் கொள்ளுங்கள்.

முஸ்லீம் லீக் ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கியுள்ள வழக்கறிஞர் ஒருவர் மக்களுடன் தொடர்புடையவர் என்றாலும் அரசியலில் தொடர்பில்லாதவர் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் அதனால் நகரில் ஏற்படும் திடீர் நெருக்கடியை அரசு அதிகாரிகளை அணுகித் தீர்க்க இவரால் முடியாது என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்.

ஊரின் நலனைக் கருத்தில் கொண்டு அரசியல் செல்வாக்கு மிக்கப் பாரம்பரியக் குடும்பத்தில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுப்பதே ஊரின் நலனுக்கு உகந்தது.    

நமதூரில் அரசியல் செல்வாக்குள்ள பாரம்பரியக் குடும்பம் ஒன்று இருக்கிறதென்றால் அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ம.மீ.சே குடும்பம் தான் என்பது அதிரை வாசிகள் அனைவரும் அறிந்ததே.

அவர்கள் நீண்ட காலமாக அரசியலில் கோலோச்சியவர்கள், ஊர் முன்னேற்றத்திற்காக தொன்று தொட்டுக் காலமாக உழைத்து வருபவர்கள் என்பதை மர்ஹூம் ம.மீ.சே.அப்துல்வஹாப் அவர்களுக்கு தமிழக அரசால் மத நல்லினக்கத்திற்காக வழங்கப்பட்ட கோட்டை அமீர் விருதுக்கான விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பாட்சா மரைக்காயர் அவர்களே மேடையில் ஒப்புவுவமை வழங்கிது சான்றுப் பகர்ந்து நிற்கிறது.

பம்பாயில் ஒருக் கட்டடத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த ஹஜ் கமிட்டியை சிவசேனா நிர்வாகம் அப்புறப்படுத்த இருந்த நிலையில் அப்போதைய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மர்ஹூம் ம.மீ.சே அபுல்ஹஸன் அவர்கள் ஹஜ் செல்வதற்காக அவர்ளுடைய சகோதரர்கள் மர்ஹூம். ம.மீ.சே.சுல்தான் அப்துல்காதர்மர்ஹூம். ம.மீ.சே அப்துல் வஹாப் அவர்களுடன் பம்பாய் சென்றிருந்த போது தகவலறிந்து மேலதிகரிகளை தொடர்பு கொண்டு உடனே தடுத்து நிருத்தப்பட்டதை நமதூர் வாசிகள் அனைவரும் அறிவர். அவர்கள் அரசியல் செல்வாக்கு இல்லாதவர்கள் என்றால் மாநிலம் கடந்து இவ்வளவுப் பெரிய சாதனையை சமுதாயத்திற்காக செய்திருக்க முடியுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அதிராம்பட்டிணத்தில் பிறந்து மயிலாடுதுறையில் நின்று வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக 10 வருடங்கள் பணியாற்றிய மர்ஹூம் ம.மீ.சே அபுல்ஹஸன் அவர்கள் மயிலாடுதுறை தொகுதியின் நலனை விட அதிகமாக அதிராம்பட்டிணம், பட்டுக்கோட்டை நலனுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தவர் இதை கற்பனையாக எழுதவில்லை அன்றைய ஊடகங்களில் இது செய்தியாக வெளியிடப்பட்டு அன்றைய எதிர்கட்சி வேட்பாளர்கள் இதை மயிலாடுதுறையில் பிரச்சாரமாகவும் செய்து வந்தனர்.

அன்று குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமன் இ.சி.ஆர் சாலையை ராஜாமடத்திலிருந்து பட்டுக்கோட்டை வழியாக முத்துப்பேட்டையுடன் இணைப்பதற்கு செய்த அனைத்து முயற்சிகளையும் முறியடித்து அதை அதிராம்பட்டிணம் வழியாக முத்துப் பேட்டையுடன் இணைப்பதற்காக கடினமான முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றிக் கண்டவர் மர்ஹூம் ம.மீ.சே அபுல்ஹஸன் அவர்கள் என்பதை நிணைவுக் கூறுகிறேன்.

அதிராம்பட்டிணத்திலிருந்து மிலாரிக்காடு சாலையும்மகிழங்கோட்டை சாலையும் அமைக்க மர்ஹூம் ம.மீ.சே.அப்துல் வஹாப் அவர்கள் அரும்பாடுபட்டார்கள்.

மேலத்தெருவில் முளைத்த திடீர் முனிக் கோயிலை அதற்கு மேல் வளர விடாமல் முக்கிய அதிகாரிகளை சந்தித்து தடுத்து நிருத்தியதுடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை அதிரை வாழ் மக்களுக்கு சாதகமாகத் திருப்பி விடுவதற்காக கடுமையாக உழைத்தவர் மர்ஹூம் ம.மீ.சே.அப்துல் வஹாப் அவர்கள் என்பதையும் நமதூர் வாசிகள் அனைவரும் அறிவர்.

கடந்த காலங்களில் நமதூரில் ஏற்பட்ட பல மதக் கலவரங்கள் மிகப் பெரும் மோதலாக மாறாமல்  மர்ஹூம் ம.மீ.சே.அப்துல் வஹாப் அவர்கள் தடுத்து நிருத்தி இருக்கின்றார்கள் என்பதை நமதூர் வாசிகள் அனைவரும் அறிவர்.

நமதூரில் வாழும் ஹிந்துக்களுடைய மத்தியிலும்முஸ்லீம்களுடைய மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதால் அவருக்கு மதிப்பளித்து அவருடைய சொல்லுக்கு இரு சமுதாயத்தவர்களும்  கட்டுப்பட்டார்கள்.இன்னும் ஏராளமான சேவைகளை நமதூர் வளர்ச்சிக்காக அவர்கள் செய்ததைப் பட்டியலிட முடியும்.


நெருக்கடியில் மாட்டிக் கொண்டவர்களுடையக் கோரிக்கையை அலச்சியம் செய்யாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகிப் பலரது நெருக்கடிகளை ம.மீ.சே.சகோதரர்கள் தீர்த்து வைத்திருக்கின்றனர். 

தெரு பாகுபாடு பாராமல்ஏழைப் பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுப் பாராமல்ஹிந்து முஸ்லீம் என்று மதபேதம் பாராமல் அனைவருடனும் ம.மீ.சே குடும்பத்தார்கள் அனைவரும் அன்பாய் பழகக் கூடியவர்கள். 

இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கை சின்னத்தில் களத்தில் நிற்கும் ம.மீ.சே.பஷீர் அஹமது அவர்கள் சிறு வயது முதலே மர்ஹூம் ம.மீ.சே அப்துல் வஹாப் அவர்களுடன் அவர்கள்  செல்லும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உடன் செல்பவர் அவர்கள் சந்திக்கும் அனைத்து அதிகாரிகளும் ம.மீ.சே.பஷீர் அஹமது அவர்களுக்கு அறிமுகமானவர் என்பதால் ம.மீசே.அபுல்ஹஸன் அவர்களைப் போல்ம.மீ.சே.சுல்தான் அப்துல்காதர் அவர்களைப் போல், மர்ஹூம் ம.மீ.சே.அப்துல் வஹாப் அவர்களைப் போல் அவர்களுடைய வழி வந்த ம.மீ.சே.பஷீர் அஹமது அவர்கள் ஊர் நலனுக்காக உழைப்பார்.

ஊரை வளர்ச்சிப் பாதைக்கு முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவும்>ஊரில் மதநல்லிணக்கம் தொடர்ந்து நிலவுவதற்காகவும்பாரபட்சமில்லாமல் கடைக்கோடிக் குடிமகனுடைய அத்தியாவசியத் தேவையை ஓடோடிச் சென்று நிறைவேற்றுவதற்காகவும் ம.மீ.சே.பஷீர் அஹமது அவர்களை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இதுவே ஊர் நலனுக்கு உகந்ததாக அமையும்.

என் தரப்பிலிருந்து மரியாதைக்குரிய ம.மீ.சே.பஷீர் அஹமது காக்கா அவர்களுக்கு ஒருக் கோரிக்கை தங்களின் முன்னோர் ஆற்றிய சேவைகளைப் போல் தாங்களும் ஊரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது அத்துடன் தங்களுடைய முன்னோர்கள் முயற்சி செய்த அகல ரயில் பாதை திட்டத்தை தங்களுக்கு மிகவும் பரிச்சயமுள்ள பட்டுக்கோட்டை சட்டமன்ற உறப்பினர் என்.ஆர்.ரங்கராஜன் அவர்களுடன் இணைந்து டெல்லி அதிகாரிகளை சந்தித்து இத்திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வர கடும் முயற்சியை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைககும் வரஹ்...    அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.