Latest News

அதிரைவாசிகள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும்!


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். ( ஸூரத்துன்னிஸா 4:59)...

நமது நாட்டின் மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த நினைக்கும் மக்கள் நலத் திட்டங்களை மாவட்ட நிர்வாகம், நகர பஞ்சாயத்(பேரூராட்சி) நிர்வகம் வழியாகவே நிறைவேற்றி வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 561 பேரூராட்சிகளில் - நமதூர் அதிராம்பட்டிணம் 21 வார்டுகளை கொண்ட ஒரு பேரூராட்சியாகும்.

·         தார் மற்றும் சிமெண்ட் சாலைகள்,

·         சாலை விளக்குகள் அமைத்தல்,

·         தண்ணீர் வழங்குதல்,

·         பொது சுகாதராம் அளித்தல், துப்புரவு (திட-திரவ கழிவுகளை அகற்றுதல்),

·         கழிவு நீர் வடிகால்கள்,

·         சமுதாய கூடம், பேரூராட்சி அலுவலகம், குடிநீர் வழங்கல்,

·         பேரூந்து நிலையம், சந்தை ஏற்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல்,

·         தேவைப்படும் போது பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தல், பயிற்சி முகாம்கள் நடத்துதல்

·         தண்ணீர் கட்டணம், நில, சொத்து, தொழில் வரிகளை வசூலித்தல்,

·         பிறப்பு-இறப்பு, வர்த்தக பாதுகாப்பு,

·          நகரில் புதிய கட்டம் கட்டுவதற்கு சான்றிதழ்கள் வழங்குதல்,

·         மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் சார்ந்த மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுதல்,

போன்ற மக்களின் அடிப்படை தேவைகளை தங்கு தடையின்றி நிறைவேற்றி தருவதே ஒரு பேரூராட்சி நிர்வாகத்தின் பிரதான பணிகளாகும்.

ஆனால் பொதுவாக நமதூரின் பேரூராட்சி மன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள், சுயேட்சைகள், சமுதாய மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போட்டி போடுவதும், அவர்களில் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதும் வழக்கமான ஒன்று. மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி வருபவர்கள் அரசு மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து வாதாடி,போராடி மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து, அரசு செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும், சலுகைகளையும், உதவிகளையும், நகர மக்களுக்கு கொண்டு சேர்ப்பதும்தான் முக்கிய பணியாக இருந்து இருக்க வேண்டும். ஆனால் இன்று நமதூரில் நிலவுகின்ற சூழ்நிலைகளை உங்கள் ஒவ்வொருவருடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

•           ஊரில் எங்கு பார்த்தாலும் குப்பைகளும், கூலங்களும்,காடுகள்போல் சாலை ஓரங்களில் பரவி கிடப்பதும்

•           ஊரில் முறையான கழிவுநீர் வடிகால் இல்லாததும்,

•           ஊர் முழுவதும் கொசு தொல்லைகள், அதனால் ஏற்படும் உடல் நல கேடுகள் மற்றும் சுகாதார கேடுகளும்,

•           சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் தேவையான அளவு வினியோகம் செய்யாததும்

•           பட்டுக்கோட்டை நகராட்சியில் கூட வசூலிக்காத குடிநீர் கட்டணத்தைவிட, அதிராம்பட்டினத்தில் வசூலிக்கப்படும் தண்ணீர் கட்டணம் அதிகமாக இருப்பதும்,

•           குடிநீர் குலாய்களில் கழிவுநீர் கலந்து வருவதும்,

•           நமதூரில் அனைத்து மதத்தவரும் இணக்கமாக வாழ்வதை கெடுக்கும் விதமாக மத துவேசம் மேலோங்கும் வகையில்,முஸ்லிம்களுக்கு சொந்தமான நமதூர் பேரூந்து நிலையம் அருகிலுள்ள இடத்தில், பயனத்தில் உள்ள வெளியூர் மற்றும் உள்ளுர் முஸ்லிம்கள், தங்களுடைய மார்க்க கடமையான தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதற்காக, ஒரு தொழும் பள்ளி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் இடையூராக இருந்து வருவதும்,

·         நமதூர் மக்களின் பெரும்பான்மையினர் சென்னையில் தொழில் செய்து வருகிறார்கள், அவர்களுக்கு நமதூர் வழியாக இயக்கப்பட்ட 'இராமேஸ்வரம் - கம்பன் எக்ஸ்பிரஸ்' ரயிலின் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. அதனை அகல ரயில் பாதை அமைப்பதாக கூறி கடந்த 8 வருடங்களாக'இராமேஸ்வரம் - கம்பன் எக்ஸ்பிரஸ்' ரயிலின் சேவையை நிறுத்தினார்கள். நமதூருக்கான அகல ரயில் பாதை அமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்கும் அல்லது 'இராமேஸ்வரம் - கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் நமதூர் வழியாக இயக்கப்படுவதற்கும் ஊர் மக்கள் கடுமையாக வலியுருத்தியும் எவரேனும் நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையே ஏன்?இவ்வளவுக்கும் நமதூர் நடப்பு எம்.பி ஒரு மத்திய அமைச்சர்,பேரூராட்சி மன்ற துணைத தலைவராக இருந்தவர் கடந்த மே'2011 வரை ஆளும் கட்சியை சேர்ந்தவர், நமது எம்எல்.ஏ-வும்,பேரூராட்சி மன்ற தலைவராக இருந்தவரும் மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள். ஆளும் கட்சியாக அதிகாரத்தில் இருந்தவர்களை பெற்ற நிலையிலும், நமதூர் மக்களின் தேவைகளை நிறைவேறாமல் இருப்பதும்,

போன்ற எண்ணற்ற நமதூர் மக்களுக்கான அடிப்படை அவசிய தேவைகள் நிறைவேதாதற்கு யார் காரணம்? சிந்தியுங்கள் மக்களே! சிந்தியுங்கள்!!

ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இதுநாள் வரை மக்கள் பிரதநிதிகளாக வந்துள்ளார். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை மக்கள் நலன், ஊரின் வளர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் அரசியல் என்பது அவர்களை பொறுத்தவரை ஒரு தொழில்.  நகர வளர்ச்சிக்கு முன்னுரிமை அவர்கள் அளித்திருந்தால் நமதூர் இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சிகள் ஆள வந்தாலும் கட்சிகள் மாறும் காட்சிகள் மாறாது. காரணம் மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்த நினைக்கும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகைகளின் 65 சதவிகிதம் அதிகாரிகளும், அரசியல் கட்சிகாரர்களும் விழுங்கிவிடுவதும், மீதம் உள்ள 35 சதவிகித்தில் ஒப்பந்தக்காரர் விழுங்கியது போக மக்களுக்கு வந்து சோர்கிறது.

நமது நாட்டில் தெழுங்கான என்கிற தனி மாநிலம் கோரி அந்த பகுதி மக்கள் எத்துனை வகையான போராட்டங்களை நடத்துகிறார்கள். நமதூரின் நிலவுகிற சுகாதரா நிலைமையை சரி செய்யவோ, துப்புரவு காரியங்களை சரி செய்யவோ மக்கள் கவனிக்கும்படியான எந்த முயற்சிகளையாவது கடந்த  5 ஆண்டுகள் பதவியில் இருந்த மக்கள் பிரதநிதிகள் செய்துள்ளார்களா?  குறைந்தபட்சம் தங்கள் பதவிகளையாவது ராஜினாமா செய்தார்களா? சிந்தியுங்கள் மக்களே! சிந்தியுங்கள்!!


அப்படியானால் நமதூரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து மக்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு அரசியல்வாதிகளை விட்டால் வேறு வழிதான் என்ன? என்று நீங்கள் நினைப்பது நமக்கு புரியாமல் இல்லை. மக்களே!  எங்கெல்லாம் ஊர் மக்கள் பங்கேற்புடன்திட்டங்கள் தீட்டப்பட்டனவோ, அவ்வூர்கள் எல்லாம் கூடுதல் வளர்ச்சியை எட்டியுள்ளது. எனவே ஊர் மக்கள் பங்கேற்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதையே சட்டமும் வலியுருத்துகிறது. அதன் காரணமாகத் தான் கிராம சபைக் (அதாவது நமதூர் அனைத்து முஹல்லா நிர்வாக) கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும் என்ற கொள்கை உருவானது. நமதூர்பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுடன் நமதூர் அனைத்து முஹல்லா நிர்வாக சபை தொடர்பு கொண்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் தங்கள் உரிமைகளை முழுதாக பெற முடியும்.

வல்ல நாயன் அல்லாஹ்வின் கிருபையால்! முன்னெப்போழுதும் இல்லாத வகையில் எதார்த்தமான சூழ்நிலையில் நமதூரில் உள்ள இரு முஹல்லா சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள வார்டுகளுக்கு பொதுவான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ள இனிய செய்தி நாம் அறிந்து வரவேற்று மகிழ்ச்சியடைந்தோம்.  காரணம் ஊரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டுமானால், மத்திய-மாநில அரசுகளின்
·         அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,
·         நபாட் வங்கி உதவியுடன் பேரழிவுகால மேம்பாட்டுத் திட்டம்,
·         சுய உதவி குழு திட்டம்,
·         பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தொகுதி மேன்பாட்டுத் திட்டம்,
·         சுற்றுச் சூழல் பாதுகாப்பு,
·         மலை நீர் சேகரிப்பு,
இதுபோன்ற பல மக்கள் நல உதவிகளுக்காக ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் மத்திய-மாநில அரசுகள் பல கோடி ரூபாய்கள் ஆண்டுதோரும் அளிக்கிறது.  அத்தொகைகள் முழுமையாக நமதூருக்கு பயன்படுத்தபட வேண்டுமானால் பேரூராட்சியில் நல்லாட்சி நடைபெற வேண்டும்.

நமதூர் அனைத்து மக்களின் சார்பாக இயங்கி வருகிற முஹல்லா சங்கங்களுக்கு கட்டுப்படுகிற,  தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை முஹல்லா நிர்வாகம் கேள்வி கேட்கும் என்கிற, திரைமறைவு பேரம் இல்லாமல், ஊழல்-லஞ்சமற்ற, காழ்புணர்களற்ற, கசப்புணர்வுகளை தூண்டாத, சுய விருப்பு-வெறுப்புகளுக்கு ஆட்படாத, வேண்டியவர்கள்-வேண்டாதவர்கள் என்று பார்க்காத, முழுக்க முழுக்க ஊரின் வளர்ச்சிக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கக் கூடிய வல்லமையுடைய நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே நமதூர் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட முடியும்.

வல்ல அல்லாஹ் முஸ்லிம்கள்தான் அவன் படைத்த மனித சமுதாயத்திலேயே சிறந்த சமுதாயம் என்று கூறுகிறான். ஆனால் முஸ்லிம்களாகிய நாம், நமக்குல் உள்ள கருத்து வேறுபாடுகளால் பல பிரிவுகளாக வாழும் வரை நாம் சிறந்த வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் அடையவே முடியாது. ஆகவேதான் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் அவரவர் வாழ்கிற ஊர்களில் உள்ள அனைத்து முஹல்லாக்களும் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் கூட்டமைப்பாக செயல்படுவதின் மூலம்தான் நமக்கான உரிமைகளும், உதவிகளையும் பெற முடியும்.
மேலே நாம் குறிப்பிட்டுள்ள காரியங்களை நமதூரின் பேரூராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் கிளைவதற்கும், தாயகத்தில் இன்ஷாஅல்லாஹ் நாம் உருவாக்க முயலும் அனைத்து முஹல்லா மக்களின் ஒற்றுமைக்கு உகந்ததாக  அமைவதற்கும், அரசியல் கட்சிள்,சமுதாய இயக்கங்கள் இதுநாள்வரை செய்துவந்த பிரித்தாலும் சூழ்ச்சிகளிலிருந்து நமதூரின் மக்கள் நிரந்தரமாக விடுபடுவதற்குமான சூழ்நிலை உருவ க்க முயல்வோமாக..
கண்ணியத்திற்குரிய அதிரை வாக்காளர்ளே! இன்ஷாஅல்லாஹ் வருகிற அக்டோபர் 19ஆம் நாள் நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு முஹல்லா சங்கங்களின் ஆதரவு பெற்ற 1,12,13,14,16,17,19,21 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், முஹல்லா சங்கங்கள் நிறுத்தாத வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் வல்லமையுடன் சமுதாயத்தின் மேன்மைக்கு  உழைக்கக்கூடிய நல்லவர்களுக்கும்,  தங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெறச்  செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மிம்பரின் (மேடை) மீதமர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய குணங்களை எடுத்துரைத்துப் பிறகு, 'அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பின் கூறுகிறேன்: (இஸ்லாத்தில் இணையும்) மக்கள், (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால், இறைமார்க்கத்திற்கு) உதவிபுரிபவர்கள் (அன்சார்) குறைந்து போய் விடுவார்கள். எந்த அளவிற்கென்றால் உணவில் உப்பிருக்கும் அளவில் தான் (உதவுபவர்கள்) மக்களிடையே இருப்பார்கள். உங்களில் ஒருவர் சிலருக்குத் தீங்கையும் மற்றவர்களுக்கு நன்மையும் விளைவிக்கக் கூடிய ஓர் அதிகாரம் எதையும் பெற்றால் நன்மை செய்பவரிடமிருந்து அதை ஏற்று தீமை செய்பவரை மன்னித்து விடட்டும்" என்று கூறினார்கள். அது நபி(ஸல்) அவர்கள் அமர்ந்த கடைசி அவையாக இருந்தது. 
அறிவிப்பவர்: .இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புஹாரி 3628
என்றும் அன்புடன்,
B. ஜமாலுத்தீன்
050-2855125

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.